
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வடோதரா நகரில் நடைபெற்று முடிந்தது. அந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது ஜனவரி 14-ஆம் தேதியான நாளை ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாட இருக்கும் நட்சத்திர டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு முக்கிய சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் மேலும் 34 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களை பூர்த்தி செய்வார். அதிலும் குறிப்பாக தற்போது வரை இந்திய அணிக்காக 74 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 68 இன்னிங்ஸ்கலில் 2966 ரன்களை குவித்துள்ளார்.
எனவே அடுத்த போட்டியில் அவர் 34 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் 69-ஆவது இன்னிங்ஸ்சிலேயே 3000 ரன்களை அதிவேகமாக அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். இவருக்கு முன்னதாக முன்னாள் வீரர் ஷிகார் தவான் தனது 72-ஆவது இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்து இருந்ததே சாதனையாக இருந்தது.
இதையும் படிங்க : மிஸ்டர் கன்சிஸ்டன்ட்னா அது இவர்தான்.. இந்திய துணை கேப்டனை பாராட்டிய – ரவிச்சந்திரன் அஷ்வின்
இவ்வேளையில் அந்த சாதனையை முறியடிக்க ஷ்ரேயாஸ் ஐயருக்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது. அதோடு அடுத்த போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தும் பட்சத்தில் விவ் ரிச்சர்ட்ஸ் உடன் சேர்ந்து அதிவேகமாக 3000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையும் சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.