இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று தனது அதிகாரப்பூர்வ முடிவினை வெளியிட்டிருந்தார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற பிசிசிஐ-யிடம் விராட் கோலி விரும்பும் தெரிவித்திருந்த வேளையில் அவரது முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டது.
விராட் கோலியின் இடத்தை நிரப்பப்போகும் ஷ்ரேயாஸ் ஐயர் :
ஆனால் விராட் கோலி தனது ஓய்வு முடிவில் இருந்து பின் வாங்காமல் அதனை இன்று உறுதி செய்திருந்தார். அதன்மூலம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அவர் தனது 14 ஆண்டுகால பயணத்திற்கு இன்று முற்றுப்புள்ளி வைத்தார். இந்திய அணிக்காக 123 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 30 சதம் மற்றும் 31 அரைசதம் என 9,230 ரன்கள் குவித்திருக்கும் வேளையில் 10000 ரன்களை எட்டாமல் வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது 36-வது வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் இனி வரும் காலங்களில் அவரது இடத்தை நிரப்பப்போகும் வீரர் யார்? என்ற கேள்வியையும் அதிகரித்துள்ளது.
எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே வெளியேறியுள்ளதால் அவர்களது இடத்தை நிரப்ப வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரருக்கான இடத்திற்கு பல பேர் போட்டிக்கு நிற்கின்றனர். ஆனால் மிக முக்கியத்துவம் வாய்ந்த அந்த நான்காவது இடத்தில் விராட் கோலிக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே இந்திய அணிக்காக 2021-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை டெஸ்ட் போட்டிகளில் 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் என 811 ரன்கள் குவித்துள்ள வேளையில் உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர் என அனைத்து போட்டிகளிலும் அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க : டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து மிட்சல் ஸ்டார்க் விலகல்.. நடராஜனுக்கு அடித்த அதிர்ஷ்டம் – விவரம் இதோ
அதோடு ஏற்கனவே இந்திய அணிக்காக மூன்று வகையான சர்வதேச போட்டியிலும் விளையாடியுள்ள அனுபவம் வாய்ந்த வீரரான அவரே விராட் கோலியின் இடத்தை நிரப்ப தகுதியான வீரர் என்பதால் விராட் கோலியின் இடத்திற்கு ஷ்ரேயாஸ் ஐயரை தேர்வுசெய்ய பிசிசிஐ விரும்புகிறது.



