ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா கோப்பையை வென்றது. அதனால் 2002, 2013க்குப்பின் 3வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. அந்த வெற்றிக்கு இறுதிப்போட்டியில் 76 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் பேட்டிங் துறையில் தாம், விராட் கோலி போன்றவர்களை விட ஸ்ரேயாஸ் ஐயர் தான் மிடில் ஆர்டரில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியதாக ரோகித் சர்மா பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சூழ்நிலை கடினமாக இருக்கும் என்பதைத் தெரிந்து நாங்கள் அதற்கு நன்றாக எங்களை உட்படுத்திக் கொண்டோம். வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் இலக்கு வெறும் 230 மட்டுமே”
சைலனட் ஹீரோ:
“ஆனால் பிட்ச் ஸ்லோவாக இருந்ததால் வெற்றி பெறுவதற்கு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அது போன்ற சூழ்நிலையில் சைலன்ட் ஹீரோ ஸ்ரேயாஸ் ஐயர் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதை மறக்காதீர்கள். மிடில் ஆர்டரில் அவர் எங்களுக்கு மிக மிக முக்கியமானவராக செயல்பட்டார். தன்னுடன் எதிர்புறம் இருக்கும் பேட்ஸ்மேனுடன் சேர்ந்து அவர் பார்ட்னர்ஷிப்புகளை அமைத்தார்”
“குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதிப் போட்டியில் விராட் கோலியுடன் இணைந்து அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் மிக மிக முக்கியமானது. லீக் சுற்றில் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக மட்டுமின்றி இறுதிப் போட்டியிலும் நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்தோம். அப்போது 50 – 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் எங்களுக்கு தேவைப்பட்டது. அதை ஸ்ரேயாஸ் செய்தார்”
ரோஹித் பாராட்டு:
“அந்த வகையில் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தார் போல் வேகமாக உட்படுத்திக் கொண்டு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. அதனால் எனது வேலையும் இருப்பதை விட குறைவாகவே இருக்கிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல இத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட சிறப்பாக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் 243 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க: 10 மாசத்துக்குள் அதை பார்க்கமலேயே 2 ஐசிசி கோப்பை.. இதாங்க தரமான இந்திய அணி.. ரோஹித் பெருமிதம்
அதனால் இந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். அதற்கு முன்பாகவே 2023 உலகக் கோப்பையிலும் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த அவர் இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் சமீப காலங்களில் ஸ்ரேயாஸ் இந்தியாவில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



