நீண்ட நாள் பிரச்சனையான நம்பர் 4 இடத்திற்கு சரியான வீரர் இவர்தான் – விவரம் இதோ

Samson-1
- Advertisement -

உலக கோப்பை தொடருக்கு முன்னர் இருந்தே இந்திய அணியின் நான்காவது இடத்தில் இறங்கும் வீரர் குறித்த சர்ச்சை இருந்து வருகிறது. ஏனெனில் நம்பர் 4 இடத்திற்கு அம்பத்தி ராயுடு தயார் செய்து பின்னர் உலக கோப்பை அருகில் வந்தபோது அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டால் பதிலாக விஜய் ஷங்கரை தேர்வு செய்தனர்.

IND

- Advertisement -

ஆனால் விஜய் சங்கர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு போட்டியில் கூட சரியாக விளையாடவில்லை. மேலும் மணிஷ் பாண்டே, ராகுல் என அடுத்தடுத்த வீரர்கள் அங்கு இறக்கப்பட்டாலும் அவர்களுக்கான வாய்ப்பு அங்கே போதுமான அளவு கொடுக்கப்படாமல் அடிக்கடி ஒரு வீரரை நான்காவது இடத்திற்கு மாற்றி மாற்றி இந்திய அணி அவர்களின் திறமையை வீணடித்தது.

ஆனால் அதன் பிறகு தற்போது சில தொடர்களாக இந்திய அணி 4-வது வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் செயல்ப்பட்டு வருகிறார். தனக்கு கிடைத்த வாய்ப்பு எல்லாம் சரியாக பயன்படுத்தி நன்றாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த சில மாதங்களாக நான்காவது இடத்தில் சிறப்பாக ஆடி வருகிறார். மேலும் தற்போதைய வங்கதேசத்திலிருந்து தொடரிலும் 3 போட்டிகளிலும் அவர் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Iyer

அதிலும் குறிப்பாக கடைசி t20 போட்டியில் அணி இக்கட்டில் இருக்கும்போது அதிரடியாக விளையாடி 5 சிக்சர்கள் குவித்தது மட்டுமன்றி அதிரடியாக ரன் குவித்தார். எனவே தற்போது இருக்கும் வீரர்களில் நம்பர் 4 இடத்திற்கு ஷ்ரேயாஸ் ஐயர் தகுதியானவர் என்றும் ராகுலை துவக்கத்தில் இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அவர்களது இடத்தை உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement