கோலிக்கு இவர் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் கிடையாது. அடுத்த கேப்டனாகவும் இவருக்கு வாய்ப்பு இருக்கு – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய அணிக்கு நீண்ட காலமாகவே இருந்துவந்த பிரச்சினை நான்காம் நிலை வீரர்தான். ஏனெனில் உலக கோப்பை தொடரின் தோல்விக்கும் இந்திய அணியின் நான்காம் நிலையில் சரியான வீரர் இல்லாததே முக்கிய காரணம் என்று பல முன்னாள் வீரர்களும் சுட்டிக் காட்டி இருந்தனர். ஏனெனில் உலக கோப்பை தொடருக்கு முன்னர் வரை நான்காவது இடத்திற்காக அம்பத்தி ராயுடு தயார் செய்யப்பட்டு வந்தார்.

Rayudu

- Advertisement -

ஆனால் திடீரென உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அவரை நீக்கிவிட்டு விஜய் ஷங்கரை தேவையின்றி அந்த இடத்தில் தேர்வு செய்து அனுப்பினர். அவரும் உலக கோப்பை தொடரில் சொதப்பினார். ஏற்கனவே நான்காவது இடத்தில் மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என பலரை இந்திய நிர்வாகம் முயற்சி செய்து பார்த்து யாரும் திருப்திகரமாக அந்த இடத்திற்கு செயல்படவில்லை.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயரை நான்காம் நிலை வீரராக களமிறங்க வாய்ப்பு கொடுத்தது அணியின் நிர்வாகம். தனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஸ்ரேயாஸ் அய்யர் நியூசிலாந்து மண்ணில் 2 அரைசதம் மற்றும் ஒரு சதம் அடித்து அசத்தினார்.

Iyer-2

மேலும் துவக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோரின் அதிரடி ஆட்டத்திற்கு பிறகு கோலிக்கு இணையாக நின்று பார்ட்னர்ஷிப் அமைப்பதில் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக செயல்பட்டார். இதன் காரணமாக நான்காம் நிலை வீரருக்கான பிரச்சினை தீர்ந்து விட்டதாக ஏற்கனவே இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஷ்ரேயாஸ் ஐயர் சிறந்த வீரர் மட்டுமின்றி சிறந்த கேப்டன் என்பது ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக நிரூபித்து உள்ளார். எனவே 25 வயதாகும் இவர் விரைவில் இந்திய அணிக்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

Iyer-1

இதுவரை 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் 748 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது சராசரி கிட்டத்தட்ட 50 உள்ளதால் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக இவர் உருவெடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement