நேரடியா டீம்ல இருக்க வேண்டியவர். இன்னைக்கு ரிசர்வ் பிளேயரா இருக்காரு – இளம்வீரருக்கு ஏற்பட்ட சோகம்

IND
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 22 ஒருநாள் போட்டிகளிலும், 29 டி20 போட்டிகளிலும் அவர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக நான்காவது இடத்தில் இறங்கும் வீரரே பார்க்கப்பட்டார். தொடர்ச்சியாக 4வது இடத்தில் இறங்கும் பேட்ஸ்மேன்கள் குறித்த விவாதம் எழுந்த போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் அமைந்தது.

Iyer-1

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே நம்பர் 4-ஆம் இடத்தில் களம் இறங்கிய தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் நிச்சயம் உறுதியான வீரராக அணியில் விளையாடுவார் என்று இந்திய அணி நிர்வாகமும் உறுதியளித்தது. அதன்படி நம்பர் 4-வது வீரராக தொடர்ச்சியாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இனி வரும் அனைத்து உலக கோப்பை தொடர்களில் நிச்சயம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தற்போது டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியிலும் அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் இங்கிலாந்து தொடரின்போது ஏற்பட்ட காயம் அவரது நிலைமையை அப்படியே மாற்றி உள்ளது. ஏனெனில் இங்கிலாந்து தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அவருக்கு பதிலாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அந்த இங்கிலாந்து தொடர் மற்றும் இலங்கைத் தொடர், ஐபிஎல் போட்டிகள் என தொடர்ச்சியான அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தற்போது இந்திய அணியின் நான்காவது இடத்திற்கான வீரராக டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் சூர்யகுமார் யாதவ் தேர்வாகியுள்ளார்.

Iyer

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட அந்த காயத்தினால் முதன் முறையாக உலகக்கோப்பையில் விளையாட அவருக்கு கிடைக்க வேண்டிய அற்புதமான வாய்ப்பு பறிபோகியுள்ளது. அணியின் முன்னணி வீரராக விளையாட வேண்டிய அவர் தற்போது ரிசர்வ் வீரராக அணியில் இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக விளையாடாமல் இருந்ததன் காரணமாக தற்போது சூர்யகுமார் யாதவ்க்கு வாய்ப்பு சென்றுள்ளது.

sky 1

இங்கிலாந்து தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் தொடரிலும் விளையாடாமல் இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது இரண்டாம் பாதியில் விளையாட இருப்பது மட்டுமின்றி உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement