- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs SA : ஒருநாள் கிரிக்கெட்டில் சத்தமின்றி ஷ்ரேயாஸ் ஐயர் – படைத்த சூப்பர் சாதனைகள் இதோ

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் போராடித் தோற்ற இந்தியா தொடரை வெல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் களமிறங்கியது. ராஞ்சியில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 278/7 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் குவின்டன் டி காக் 5, ஜானெமன் மாலன் 25 என பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டானாலும் 3வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்று 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரீசா ஹென்றிக்ஸ் 74 (76) ரன்களும் ஐடன் மார்க்ரம் 79 (89) ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

இறுதியில் டேவிட் மில்லர் 35* (34) கேசவ் மகாராஜ் 5 (13) வேன் பர்ணல் 16 (22) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பெரிய ரன்களை எடுக்க விடாமல் அற்புதமாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 279 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் தவான் 13 (20) சுப்மன் கில் 28 (26) என குறைந்த ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றமளித்தனர்.

- Advertisement -

அசத்திய ஷ்ரேயஸ்:
அதனால் 48/2 என்ற சுமாரான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவிற்கு அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் – இஷான் கிசான் ஆகியோர் மேற்கொண்டு எளிதாக விக்கெட்டை விடாமல் 35 ஓவர்கள் வரை நங்கூரமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள். ஒரு கட்டத்தில் அரைசதம் கடந்து 3வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் மெகா பர்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த இந்த ஜோடியில் அதிரடி காட்டிய இசான் கிச்சான் 4 பவுண்டரி 8 சிக்சருடன் 93 (84) ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

இருப்பினும் அந்த தவறைச் செய்யாத ஸ்ரேயாஸ் அய்யர் மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்து 15 பவுண்டரியுடன் சதமடித்து 113* (111) ரன்கள் விளாசி வெற்றிபெற வைத்தார். அவருடன் சஞ்சு சாம்சன் 30* (36) ரன்கள் எடுத்ததால் 45.5 ஓவரிலேயே 282/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 2017இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி ஏற்கனவே 9 அரை சதங்களையும் 1 சதமும் விளாசி நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் நேற்றைய போட்டியில் 2வது சதத்தை விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

சொல்லியடிக்கும் ஸ்ரேயஸ்:
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்திய இவர் சுழல் மற்றும் மித வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய இந்திய ஆடுகளங்களில் அபாரமாக செயல்பட்டாலும் டி20 கிரிக்கெட்டில் மெதுவாக பேட்டிங் செய்வதை வழக்கமாக வைத்திருப்பதால் ரசிகர்களிடம் விமர்சனங்களுக்கு உள்ளானார். அதைவிட அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் உயரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அடிக்கடி அவுட்டான இவரது பலவீனம் உலகிற்கே அம்பலமானது.

அதனால் இப்போதெல்லாம் அவர் களமிறங்கும் போது ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி எதிரணியினர் சோளியை முடித்து விடுகிறார்கள். ஆனால் நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்காவினர் அந்த யுக்தியை பயன்படுத்த தவறியதை பயன்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 4வது இடத்தில் களமிறங்கி அற்புதமான சதமடித்து அசத்தினார்.

- Advertisement -

1. சொல்லப்போனால் இந்த சதத்தால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4வது இடத்தில் களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

2. மேலும் 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 2022ஆம் ஆண்டில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். நேற்றைய விருதையும் சேர்த்து 5 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள அவருக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று 2வது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

3. மேலும் இந்த வருடம் 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக ரன்கள் எடுத்த 2வது இந்திய வீரராக அவர் அசத்தி வருகிறார். அந்த பட்டியல்:
1. ரிஷப் பண்ட் : 1181
2. ஷ்ரேயஸ் ஐயர் : 1128*
3. சூர்யகுமார் யாதவ் : 1017

இதையும் படிங்க : IND vs SA : சொந்த ஊரில் மிரட்டிய இளம் வீரர் – சாதனைக்கு பின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய நெகிழ்ச்சி வீடியோ உள்ளே

4. அதுபோக 80, 54, 63, 44, 50, 113* என தன்னுடைய கடைசி 6 போட்டிகளில் 4 சதங்களையும் 1 சதமும் அடித்துள்ள அவர் என்னதான் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறினாலும் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டை விட ஒருநாள் கிரிக்கெட்டில் சத்தமின்றி கில்லியாக செயல்பட்டு வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -
Published by