இவரு இப்படி ஆடினே இருந்தா மனீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பே கிடைக்காது போல – விவரம் இதோ

Pandey-1

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2வது டி20 போட்டி நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை முன்னிலை வகிக்கிறது.

இலங்கை அணிக்கு எதிரான இந்தத் தொடர் மட்டுமின்றி கடந்த பல தொடர்கள் ஆகவே இந்திய அணியில் மனிஷ் பாண்டே இடம் பெற்று வருகிறார். ஆனால் அவருக்கான வாய்ப்பு தொடர்ந்து கிடைக்காமல் வெளியிலேயே அமர்ந்து இருந்தாலும் அணிக்குள் எப்படியாவது வந்து விடவேண்டும் என்ற ஒரு உத்வேகத்துடன் உள்ளார்.

ஏற்கனவே இந்திய அணி நான்காவது இடத்திற்காக ஆடிவந்த மனிஷ் பாண்டே சற்று தொய்வு அடைந்ததால் அவருக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அந்த இடம் வழங்கப்பட்டது. தனது இடத்தை சரியாக பயன்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் ஒருநாள் போட்டிகளில் அசத்தினார். கடைசியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் 5 போட்டிகளில் அரைசதத்தை விளாசி ஒருநாள் போட்டியில் தனது இடத்தை தக்க வைத்ததுள்ளார்.

Iyer-2

அது மட்டுமின்றி தற்போது டி20 போட்டிகளிலும் சிறப்பாக ஆடி தனது இடத்தை தக்க வைத்து வருகிறார். குறிப்பாக கடந்த சில தொடர்களாகவே டி20 அசத்தி வரும் ஐயர் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் கோலிக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் இறங்கி 26 பந்துகளில் 34 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை பார்க்கும் பொழுது இனி மனிஷ் பாண்டே வாய்ப்பு கிடைக்காது என்றே தோன்றுகிறது.

- Advertisement -

rahul 3

ஏனெனில் ஏற்கனவே மிடில் ஆர்டரில் இருந்து துவக்க வீரராக சென்றுள்ளார். துவக்க வீரர்கள் இருவரும் அதாவது தவான் ரோகித் அந்த இடத்தில் மீண்டும் நிலைபெறும் போது ராகுல் பின் தள்ளப்படுவார். அவ்வாறு தள்ளப்படும் போது ராகுல் 4 ஆவது இடத்திலும், ஐயர் 5 ஆவது இடத்திலும் ஆடுவார்கள் என்பதால் இனி பாண்டே அணியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.