தோனி, ராயுடு, கார்த்திக் எல்லாரையும் தாண்டி 4 ஆவது வீரராக இவர் இருக்க இதுதான் காரணம் – விவரம் இதோ

Iyer-1
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த உலகக் கோப்பைக்கு பின்னர் தொடர்ச்சியாக இந்திய அணியின் நான்காவது வீரராக களமிறங்குகிறார். மேலும் தான் அந்த இடத்திற்கு தகுதியானவர் என்பதையும் நிரூபித்து வருகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 35 பந்துகளில் 44 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

iyer

- Advertisement -

அது மட்டுமின்றி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 29 பந்துகளில் 58 ரன்கள் குவித்து 204 என்ற பெரிய ரன் கணக்கை சேசிங் செய்ய உதவினார். மேலும் அதனை தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டியிலும் 44 ரன்கள் குவித்தார். தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை டி20 போட்டியிலும் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது நான்காம் நிலை ஆட்டக்காரராக இந்திய அணியில் அவர் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஏனெனில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இதன் பின்னர் வரும் அனைத்து போட்டியிலும் அவரை 4 ஆம் நிலையிலே இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஐசிசி சம்பியன்ஸ் டிராபி க்கு பிறகு இறங்கிய நான்காவது வீரர்களின் இவரே அதிகபட்ச சராசரி வைத்துள்ளார்.

ind

இவருக்கு முன்னர் தினேஷ் கார்த்திக், எம்எஸ் தோனி, அம்பத்தி ராயுடு மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் அந்த இடத்தில் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். இருப்பினும் ஐயரே அந்த இடத்தில் சிறப்பாக விளையாடி வருவதாக புள்ளி விவரங்கள் காண்பிக்கின்றன. எனவே தொடர்ந்து அவர் நான்காவது இடத்தில் விளையாடுவது உறுதியாகி உள்ளது.

Advertisement