வசமாக சிக்கிய சோயப் மாலிக்.. வெளியேற்றிய வங்கதேச வாரியம்.. சானியாவை கழற்றிவிட்ட பின் நேர்ந்த பரிதாபம்

- Advertisement -

நட்சத்திர பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தம்முடைய 2வது மனைவி சானியா மிர்சாவை கழற்றி விட்டு 3வது திருமணம் செய்து கொண்டார். இந்தியாவை சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை காதல் திருமணம் செய்திருந்த அவர் குழந்தை பெற்றுக் கொண்ட பின்பும் 3வது திருமணம் செய்தது ரசிகர்களுக்கு வியப்பாக அமைந்தது.

மேலும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற சனா ஜாவேத் எனும் பாகிஸ்தான் சினிமா நடிகையை சோயப் மாலிக் 3வது திருமணம் செய்து கொண்டார். அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் மகிழ்ச்சியுடன் திருமணத்தை முடித்த சோயப் மாலிக் அடுத்த நாளே வங்கதேசத்தில் நடைபெற்று வரும் பிபிஎல் தொடரில் பரிசால் அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

வெளியேற்றிய வங்கதேசம்:
அந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிராக பரிசால் அணிக்காக விளையாடிய அவர் முக்கியமான நேரத்தில் ஒரே ஓவரில் 3 அடுத்தடுத்த நோபால்களை போட்டு 18 ரன்களை வாரி வழங்கினார். இத்தனைக்கும் மெதுவாக ஓடி வந்து பந்து வீசக்கூடிய ஸ்பின்னரான அவர் ஒன்றல்ல இரண்டல்ல 3 தொடர்ச்சியான நோபால்களை வீசி எதிரணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததார்.

அது மட்டுமல்லாமல் டெத் ஓவர்களில் களமிறங்கி அடித்து நொறுக்க வேண்டிய அவர் 6 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 5 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் சோயப் மாலிக் ஸ்பாட் ஃபிக்சிங் செய்தார் என்று ரசிகர்கள் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்கள்.

- Advertisement -

இந்நிலையில் சோயப் மாலிக் பிபிஎல் தொடரில் தங்களுடைய அணிக்காக விளையாடுவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பரிசாக அணி நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக அந்த போட்டியில் சோயப் மாலிக் ஃபிக்சிங் செய்திருக்கலாம் என்று விமர்சனங்களும் செய்திகளும் வெளிவந்த நிலையில் வங்கதேச வாரியத்தின் பரிந்துரைப்படி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பரிசால் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை போட்டியில் சதமடித்து அசத்திய ராசியில்லா வீரரின் தம்பி – விவரம் இதோ

அதனால் உடனடியாக வங்கதேசத்திலிருந்து சோயப் மாலிக் வெளியேறியுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் சானியா மிர்சாவை கழற்றி விட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று சோயப் மாலிக் பற்றி சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவர் ஃபிக்சிங் செய்தாரா என்பது பற்றிய விசாரணையும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement