வேண்டுமென்றே தோனிக்கு குறிவைத்து பீமர் வீசினேன். அதன் காரணம் இதுதான் – அக்தர் வெளிப்படை

Akhtar-3

இந்திய அணிக்காக தோனி 2004 ஆம் ஆண்டு அறிமுகமானார். அவர் அறிமுகமான சில போட்டிகளில் நன்றாக ஆடாமல் முதன் முதலில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 148 ரன்கள் ஒருநாள் போட்டியில் அடித்தார். அதேபோன்று டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடித்துள்ளார்.

Akhtar

அதிசயமாக அந்த முதல் சதத்திலும் 148 ரன்கள் எடுத்துள்ளார் மகேந்திரசிங் தோனி. இந்நிலையில் தோனி முதல் சதம் அடித்த போது அவருக்கு பந்துவீசி கொண்டிருந்தார் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். மேலும் அந்த போட்டியில் வேண்டுமென்றே தோனியை தாக்கும் விதத்தில் பீமர் பந்துகளை வீசி இருக்கிறார் அக்தர். இது குறித்து தற்போது பேசியுள்ளார் சோயிப் அக்தர். அவர் கூறுகையில்…

பைசலாாபாத்தில் நகரத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நான் தொடர்ச்சியாக 9 ஓவர்கள் பந்துவீசினேன். அந்த ஆட்டத்தில் தோனி சதம் அடித்திருந்தார். நான் தோனி சதம் அடித்த பின்னர் தொடர்ந்து அவரைக் குறிவைத்து பந்தை வீசினேன். அவர் தொடர்ந்து அடித்து விளையாடிய விதம் என்னை வெறுப்படைய வைத்தது.

Akhtar 2

அதனால் நான் அவருக்கு எதிராக வேண்டுமென்றே சில பீமர் பந்துகளை தொடர்ந்து வீசினேன். இருப்பினும் அத்தனையும் தோனி சிறப்பாக எதிர்கொண்டார். அந்த பந்துகளை நான் வேண்டுமென்றே தான் வீசினேன். இப்போது அதனைப்பற்றி நினைத்து பார்க்கையில் அது தவறு என்று எனக்கு தோன்றுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

- Advertisement -

Akhtar 4

அதன் பின்னர் போட்டி முடிந்தவுடன் அதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டேன். என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பேட்ஸ்மேனை குறிவைத்தே தாக்கினேன். நான் அப்படி செய்திருக்கக் கூடாது. தோனி நான் எப்படி பந்து வீசினாலும் அடித்துக் கொண்டே இருந்தார் அதன் காரணமாகத் தான் அப்படி வீசினேன் என்று தற்போது கூறியுள்ளார் சோயிப் அக்தர்.