ஆரம்பத்தில் இவரை பார்க்கும் போது சிறுபிள்ளை போல இருந்தார். ஆனா இப்போ – இந்திய வீரரை புகழ்ந்த அக்தர்

Akhtar
- Advertisement -

சமீப காலமாகவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்திய வீரர்கள் குறித்து அடிக்கடி தனது கருத்தினை அவருக்கு சொந்தமான யூடியூப் சேனல் மூலம் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் பல்வேறு இந்திய அணி வீரர்களை புகழ்ந்து பேசியுள்ளார் அத்தர்.

Kohli

- Advertisement -

அப்படி தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியை புகழ்ந்து பேசிவரும் அவர் அவ்வப்போது கோலியை உலகின் தலைசிறந்த அவர் கூறுவது உண்டு. அந்த வகையில் தற்போது தான் ஆரம்ப காலத்தில் பார்த்த விராட் கோலி குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ள அவர் கூறுகையில் :

2010-11 ஆம் ஆண்டுகளில் விராத் கோலி இந்திய அணியில் விளையாடிய நேரத்தில் அவரை நான் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவர் ஒரு சிறு பிள்ளை போன்று தோன்றும் ஆனால் அவருக்கு இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து கிடைத்த ஆதரவு அவரை சிறப்பாக விளையாடியது மேலும் அதனை சரியாகப் பயன்படுத்தி தொடர்ந்து பயன்படுத்திய கோலி இன்று சர்வதேச அளவில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக உருமாறி உள்ளார் என்று கூறியுள்ளார்.

மேலும் இன்று கோலி அடைந்துள்ள இந்த பிரம்மாண்ட வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. அவரின் இந்த வளர்ச்சி அவரது திறமைக்கான வெற்றிதான் அவர் இவ்வாறு தொடர்ந்து செயல்படுவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை எனில் அவர் உண்மையிலேயே மிகச்சிறந்த வீரர் என்று பாராட்டியுள்ளார்.

Kohli

அண்மையில் தொடர்ந்து இந்திய வீரர்களை புகழ்ந்து வரும் அவர் மீது ரசிகர்கள் சிலர் விமர்சனங்கள் வைப்பதும் உண்டு. கோலி மட்டுமின்றி ரோகித் சர்மாவின் ஆட்டத்தையும் அவர் மிகவும் வியந்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement