கோலியம் நானும் அடிப்படையில் உறவினர்கள். யாருக்கும் தெரியாத உறவினை கூறிய சோயிப் அக்தர் – இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே

- Advertisement -

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருவதால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது கிரிக்கெட் அனுபவங்களையும், முக்கிய நிகழ்வுகளையும் சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர்.

Akhtar

மேலும் அவ்வப்போது வீரர்களிடையே நேரடியாகவும் உரையாடிக் கொள்கின்றனர். அந்த வகையில் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் தொடர்ந்து தனது யூடியூப் சேனல் மூலம் கிரிக்கெட் குறித்த பல்வேறு விமர்சனங்களையும், கருத்துக்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

- Advertisement -

அதன்படி தொடர்ந்து இந்திய அணி குறித்தும், இந்திய அணி வீரர்கள் குறித்தும் புகழ்ந்து பேசிவரும் அக்தரின் பல கருத்துக்களுக்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. மேலும் அவரின் சில பேட்டிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து அவர் கூறியுள்ள கருத்து தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Kohli-1

இது குறித்து அக்தர் கூறுகையில் : விராட் கோலி எனது சிறந்த நண்பர்களில் ஒருவராக இருக்கக்கூடியவர். ஏனென்றால் நாங்கள் இருவருமே பஞ்சாபிகள் இருவருக்கும் ஒரே குணாதிசயம் இருக்கும். கோலி எனக்கு ஜூனியராக இருந்தாலும் அவரை நான் அதிகம் மதிக்கிறேன். களத்திற்கு வெளியே இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். ஆனால் களத்தில் மிகச்சிறந்த எதிரிகளாக இருந்து இருப்போம் என்றார்.

akhtar

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கோலி அக்தருக்கு எதிராக 2010ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் மட்டுமே விளையாடியுள்ளார். அந்த போட்டியில் 27 பந்துகளில் 18 ரன்களை குவித்த கோலி அக்தரின் பந்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இருவரும் கிரிக்கெட் களத்தில் ஒருவருக்கொருவர் நேருக்குநேர் மோதிக் கொண்டது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement