சஞ்சு சாம்சன் இந்திய அணியில் விளையாட காரணமே கம்பீர் எடுத்த அந்த முடிவால் தான் – சோயிப் அக்தர் கருத்து

Shoaib Akhtar
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும் 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் 232 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற வாழ்வா? சாவா? போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

சஞ்சு சாம்சன் விளையாட காரணம் கம்பீர் தான் : சோயிப் அக்தர்

அதுமட்டும் இன்றி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த அரையிறுதி போட்டியிலும் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றுள்ளார். இந்த தொடரில் ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் விளையாட காரணமே தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் நிர்வாகத்துடன் போராடி தான் சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வந்துள்ளார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் உள்ளார். ஆனால் தோனி, தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்கள் இருந்ததால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து கம்பீர் புதிய பயிற்சியாளர் பதவிக்கு வந்த பிறகுதான் சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என தேர்வுக்குழுவினரிடம் சண்டையிட்டு அணிக்குள் கொண்டு வந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இறுதிப்போட்டியில் வெற்றிபெற இந்தவொரு விடயம் ரொம்ப முக்கியமா இருக்கும் – சூரியகுமார் யாதவ் பேச்சு

அவரது நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் சஞ்சு சாம்சன் தற்போது அற்புதமாக விளையாடி வருகிறார். கம்பீர பயிற்சியாளராக மாறவில்லை என்றால் சஞ்சு சாம்சன் தனது இடத்திற்காக இன்னும் போராடியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் சோயிப் அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement