யுவராஜை கட்டியணைத்தேன் ஆனால் இப்படி நடக்கும்னு நான் யோசிச்சிகூட பாக்கல – மனம்திறந்த அக்தர்

akhtar 2

ஷோயப் அக்தர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சமீப காலமாக இந்திய வீரர்களை சீண்டி வருகிறார். சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சௌரவ் கங்குலி என பலரையும் கத்துக்குட்டிகள் என்று கூறி வருகிறார். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் கடவுள் எல்லாம் கிடையாது, நான் அப்படி அவரை அங்கீகரிப்பதும் இல்லை என்று பேசியிருந்தார்.

Akhtar

இவருடைய காலகட்டத்தில் எதிரணி வீரர்கள் உடன் மட்டுமல்லாது தன்னுடைய அணி வீரர்களுடனும் ஏதாவது ஒரு சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். எப்போதும் அன்பும், வெருப்பமான உறவையே அனைவரிடமும் கடைப்பிடிப்பார். ஹர்பஜன் சிங் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோருடன் பல வாக்குவாதங்களை வைத்துக்கொண்டிருந்தார் சோயப் அக்தர்.
.
இந்நிலையில் யுவராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருடன் குத்துச்சண்டை செய்த சம்பவங்களை பற்றி சமீபத்தில் பேசியுள்ளார் சோயப் அக்தர். அவர் கூறுகையில்… நான் குத்துச் சண்டை எல்லாம் செய்ய மாட்டேன், மற்றவர்களிடம் அன்பை காண்பிப்பதற்காக அப்படி நடந்து கொள்வேன். இதுதான் எனது பாணி, வெளியிலிருந்து பார்த்தால் ஆக்ரோஷமாக எல்லை மீறுவது போல் தெரியும்.

akhtar

நான் ஒருவரை விரும்பி விட்டால் அவர்களிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறேன். ஒருமுறை யுவராஜ் சிங்கை கட்டி அணைக்கும் போது அவரது முதுகெலும்பு உடைந்து விட்டது. அதேபோன்று அதற்கு முன்பு ஒருமுறை சாகித் அப்ரிடி கட்டியணைத்து அவரது விலா எலும்புகளை உடைத்துவிட்டேன். இதுபோன்று அப்துல் ரசாக்கையும் செய்துள்ளேன்.

Akhtar 1

- Advertisement -

இது எனது அன்பு காண்பிக்கும் ஒரு விதம். என்னுடைய இளம் நாட்களில் இப்படித்தான் முட்டாள்தனமாக நடந்து கொண்டிருந்தேன் என்று பேசியுள்ளார் சோயப் அக்தர். அவரின் இந்த விமரிசையான பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.