இப்படி ஒரு கஷ்டத்துக்கு இடையே விளையாடிய இவரை பாராட்டியே ஆக வேண்டும் – சோயிப் அக்தர் கருத்து

Akhtar
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற “பாக்ஸிங் டே” டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு அணிகளும் தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் செய்த தவறை திருத்தி இரண்டாவது போட்டியில் புதிய வீரர்களுடன் உத்வேகத்துடன் களமிறங்கிய இந்திய அணி வலுவான ஆஸ்திரேலிய அணியை எளிதாக சமாளித்து வெற்றி பெற்றது.

ashwin 1

- Advertisement -

இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என இரு தரப்பினரும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரைக் கூட அரைசதம் அடிக்க விடவில்லை. மேலும் பேட்ஸ்மேன்கள் வரிசையில் ரஹானே மற்றும் ஜடேஜா ஆகியோர் சதம் மற்றும் அரை சதம் விளாசி பேட்டிங்கில் தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டும் வகையில் பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறுகையில் இந்திய அணியின் அறிமுக வீரரான முகமது சிராஜின் பந்துவீச்சு குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது போட்டியில் திறம்பட விளையாடிய சிராஜை உண்மையிலேயே நான் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

Siraj-3

ஏனெனில் தனது தந்தையின் இறுதிச் சடங்குகளில் கூட பங்கேற்காமல் அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலியாவிலேயே தங்கினார். அதன்பிறகு தற்போது நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அதனை சரியான முறையில் பயன்படுத்தி தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் உண்மையில் அவர் இந்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசினார்.

siraj 2

அவரது பந்து வீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. உண்மையில் தான் கூறியபடியே அவர் தந்தைக்கான அஞ்சலியை இந்த போட்டியின் மூலம் வெற்றியுடன் செலுத்திவிட்டார் இது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement