- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நீரஜ் சோப்ரா அம்மாவின் வார்த்தைகளால் சோயப் அக்தர் நெகிழ்ச்சி.. அர்ஷத் அம்மாவின் வார்த்தையால் இந்தியர்கள் நெகிழ்ச்சி

பாரிஸ் நகரில் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் தங்கநாயகன் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் அவர் ஈட்டி எறிதலில் அதிக தூரம் வீசி தங்கப் பதக்கம் வென்றார். அதனால் ஒலிம்பிக் வரலாற்றில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மாபெரும் வரலாற்றையும் அவர் படைத்திருந்தார்.

அந்த வரிசையில் இம்முறையும் அவர் தகுதி சுற்றில் அபாரமாக விளையாடி நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றார். அந்த நிலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா தன்னுடைய முதல் எறிதலை தவறாக வீசினார். ஆனால் அவரைத் தொடர்ந்து வீசிய பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான் பாசம்:
அதன் வாயிலாக ஒலிம்பிக் வரலாற்றில் நீண்ட தூரம் வீசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அதைத் தொடர்ந்து 2வது எறிதலில் 89.45 மீட்டர் தூரம் வீசிய நீரஜ் சோப்ரா 2வது இடத்தை வலுவாக பிடித்தார். அதன் பின் 4 எறிதலை தவறாக வீசியும் மற்ற வீரர்களால் அவரை தொட முடியவில்லை. அதனால் தங்கப் பதக்கத்தை தவறவிட்டாலும் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

அவரை விட அதிக தூரம் வீசிய அர்சத் நதீம் 42 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்காக ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார். அப்போட்டி முடிந்ததும் நீரஜ் சோப்ரா அம்மா பேசியது பின்வருமாறு. “நீரஜ் லேசான காயமடைந்துள்ளார். அதையும் தாண்டி அவர் வென்ற வெள்ளி எங்களுக்கு தங்கத்தை போன்றது. அவர் வீட்டுக்கு வந்ததும் பிடித்த உணவை விருந்தளிப்பேன். தங்கம் வென்ற அர்சத் நதீமும் என்னுடைய மகன் தான். அவருக்காகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

அந்த கருத்தை பார்த்து நெகிழ்ச்சியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் “தங்கம் வென்றவரும் என்னுடைய மகன் தான்” என்ற வார்த்தைகளை ஒரே ஒரு அம்மாவால் மட்டுமே தெரிவிக்க முடியும். அற்புதமானது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் அர்சத் நதீம் அம்மா நீரஜ் சோப்ரா பற்றி பேசியுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: பாகிஸ்தான் அணியில் அந்த பிரச்னை இருப்பது உண்மைதான்.. எங்களுக்காக ஒரு ஆளை நியமியுங்க – நசீம் ஷா விசித்திர கோரிக்கை

“நீரஜ் சோப்ராவும் என்னுடைய மகன் போன்றவர் அவருக்காகவும் நான் வேண்டிக் கொண்டேன். அவர் நதீமின் சகோதரரை போன்றவர். கடவுள் அவருக்கும் நிறைய வெற்றிகளையும் மற்றும் பதக்கங்களையும் கொடுக்கட்டும்” என்று கூறினார். அவருடைய இந்த கருத்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைக்கிறது. மொத்தத்தில் இந்தியா – பாகிஸ்தான் தாய்மார்கள் இப்போதும் சகோதரத்துவத்துடன் இதிலிருந்து தெரிகிறது.

- Advertisement -