ஸ்டார்க்கை ரோஹித் அழிச்சுடாரு.. இந்த காரணத்தால் 100% இந்தியா உ.கோ ஜெய்க்கனும்.. வாழ்த்திய அக்தர்

Shoaib Akhtar
- Advertisement -

உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ள ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. குறிப்பாக ஜூன் 24ஆம் தேதி செயின் வின்சென்ட் நகரில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா பவுலர்களை புரட்டி எடுத்து 92 (41) ரன்கள் குவித்தார். குறிப்பாக உலகின் தரமான பவுலராக அறியப்படும் மிட்சேல் ஸ்டாக்கிற்கு எதிராக அவர் 6, 6, 4, 6, 0, 6 என ஒரே ஓவரில் 28 ரன்கள் தெறிக்க விட்டார். இதனால் ஸ்டார்க்கிற்கு எதிராக ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

- Advertisement -

வாழ்த்திய அக்தர்:
அவருடைய அதிரடியால் இந்தியா 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு முயற்சித்தும் 181/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் தோல்வியை பரிசளித்த காரணத்தாலேயே இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்து இந்தியா வென்றதாக சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஸ்டார்க்கை வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா 150 ரன்கள் அடிப்பதைப் பார்க்க விரும்பியதாக தெரிவிக்கும் அவர் இனிமேல் இது இந்தியா வெல்ல வேண்டிய உலகக்கோப்பை என்று வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பேசியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவுக்கு என்ன ஒரு அற்புதமான வெற்றி. வென்றிருக்க வேண்டிய கடந்த உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்ததால் அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள். கடந்த ஃபைனலில் சந்தித்த தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம் ஆஸ்திரேலியாவுக்கு இம்முறை தொல்லையாக மாறியது. அவர்கள் ஆஸ்திரேலியாவை திருப்பி அடிக்க விரும்பினர். அதற்கு என்ன தேவையோ அதை ரோஹித் சர்மா செய்தார்”

இதையும் படிங்க: ரோஹித் அசால்ட்டா அடிச்சாரு.. உண்மையா அந்த 2 பேர் தான் திருப்பு முனையை உண்டாக்குனாங்க.. வாழ்த்திய சச்சின்

“புத்திசாலித்தனமான எண்ணத்துடன் விளையாடிய அவர் ஸ்டார்க்கை அழித்தார். அவர் இன்று 150 ரன்கள் அடித்திருக்க விரும்புகிறேன். வெல்டன் இந்தியா. இது உங்களுடைய உலகக் கோப்பை. நீங்கள் இதை வெல்ல வேண்டும். உலகக்கோப்பை ஆசிய கண்டத்திலேயே இருக்க வேண்டும். கடந்த உலகக் கோப்பையையும் நீங்கள் வென்றிருக்க வேண்டும். அதற்கு நீங்கள் 100% தகுதியானவர். எனது ஆதரவு உங்களுடன் இருக்கும். ரோஹித் சர்மா கோப்பையை தூக்குவதற்கு தகுதியானவர்” என்று கூறியுள்ளார்.

Advertisement