ரோஹித் அசால்ட்டா அடிச்சாரு.. உண்மையா அந்த 2 பேர் தான் திருப்பு முனையை உண்டாக்குனாங்க.. வாழ்த்திய சச்சின்

Sachin Tendulkar
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. குறிப்பாக ஜூன் 24ஆம் தேதி ஆஸ்திரேலியாவை தங்களுடைய கடைசி சூப்பர் 8 போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இந்திய அணி செமி ஃபைனலில் இங்கிலாந்தை ஜூன் 27ஆம் தேதி கயானா நகரில் எதிர்கொள்கிறது.

முன்னதாக செயிண்ட் வின்சென்ட் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 92 (41) ரன்கள் குவித்து அசத்தினர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு முயற்சித்தும் 181/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து வெளியேறியது.

- Advertisement -

வாழ்த்திய சச்சின்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அரஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி ஆஸ்திரேலிய பவுலர்களை அடித்து நொறுக்கி 92 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அப்போட்டியில் பேட்டை அற்புதமாக சுழற்றி டைமிங்கை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவை ரோகித் சர்மா வெளுத்ததாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். அதை விட ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை பும்ரா எடுத்ததும் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சேல் மார்ஷ் கொடுத்த அசாத்தியமான கேட்ச்சை பவுண்டரி எல்லையில் அக்சர் பட்டியல் தாவிப் பிடித்ததுமே இந்தியாவின் வெற்றிக்கு திருப்பும் முனையாக அமைந்ததாகவும் சச்சின் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அசத்திய இந்தியா அடுத்ததாக செமி ஃபைனலில் இங்கிலாந்து எதிர்கொண்டு வெற்றி பெறுவதைப் பார்க்க காத்திருக்க முடியவில்லை என்றும் சச்சின் வாழ்த்தியுள்ளார். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை பார்த்தது உண்மையான மகிழ்ச்சி. நல்ல இடங்களில் நின்ற அவரால் பேட் ஸ்விங் மற்றும் டைமிங் காரணமாக தாம் விரும்பும் தூரத்தை பெற முடிந்தது. தேவையான நேரத்தில் ஸ்பெஷல் இன்னிங்ஸ். வெல்டன் இந்தியா. 2 தருணங்கள் நம்முடைய வெற்றியை தீர்மானித்தது”

இதையும் படிங்க: பும்ராவுக்கு நிகராக சத்தமின்றி சம்பவம் செய்யும் அர்ஷ்தீப் சிங்.. 17 வருட டி20 உலகக் கோப்பையில் 2 புதிய சாதனை

“ஒன்று பவுண்டரி எல்லையில் அக்சர் பட்டேலின் அற்புதமான கேட்ச். மற்றொன்று ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை ஜஸ்பிரித் பும்ரா எடுத்ததாகும். தற்போது செமி ஃபைனலுக்காக காத்திருக்க முடியவில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலுக்கு இங்கிலாந்தை வீழ்த்தி இம்முறை இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement