என்னை பொறுத்தவரை இந்திய அணியின் வீரரான இவரே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் – சந்திரபால் பேட்டி பேட்டி

Chanderpaul

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான சந்திரபால் அந்த அணியின் முன்னணி வீரராக பல ஆண்டுகளாக திகழ்ந்தார். மேலும் அவரது பேட்டிங் ஸ்டைல் வித்தியாசமாக இருந்ததால் அதற்காகவே அவருக்கு என்று உலகெங்கும் தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. அவரின் ஆட்டமும் எப்போதும் அந்த அணிக்கு பலமாக அமைந்தது.

Chanderpaul 1

மேலும் தற்போது இந்தியாவில் நடைபெற்ற உலக சாலை பாதுகாப்பு தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பங்கேற்று விளையாடினார். அதன் பின்னர் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதியில் நாடு திரும்பினார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணி குறித்தும் இந்திய அணி வீரர்கள் குறித்தும் பேட்டி அளித்த சந்திரபால் தற்போதைய உலகின் சிறப்பான வீரர் குறித்த தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

kohli 2

தற்போதைய நவீன கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தான் தற்போதைய கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறுவேன். ஏனெனில் அவருடைய உடற்தகுதி மற்றும் அவருடைய பேட்டிங்கில் உள்ள ஸ்கில் போன்றவை அவரின் மிகச்சிறப்பான ஆட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

- Advertisement -

மேலும் அவருடைய கடின உழைப்பை நாளுக்குநாள் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். அது மட்டுமின்றி உலகெங்கிலும் பல மைதானங்களில் ரன் குவிக்கும் அவர் அனைத்து பவுலர்களுக்கும் எதிராக தனது ஆதிக்கத்தை நிரூபித்து வருகிறார். மேலும் தற்போது நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்காக அணியை தயார் செய்து வரும் கோலி இந்த டி20 தொடரை கைப்பற்ற நினைக்கிறார் என்று தோன்றுகிறது.

Kohli-2

ஏனெனில் தொடர்ச்சியாக பல தொடர்களை தவற விட்ட கோலி தலைமையிலான இந்திய அணி இம்முறை சாதிக்கும் என்ற வெறியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் இந்த தொடரில் தங்களது அழுத்தமான ஆட்டத்தை அனைத்திற்கும் எதிராக காண்பிப்பார்கள் என்றே தெரிகிறது. எனவே என்னை பொருத்தவரை கோலியே இப்பொழுது உலகின் தலைசிறந்த வீரர் என்று நான் கூறுவேன் என்று சந்திரபால் கூறியது குறிப்பிடத்தக்கது