- Advertisement -
ஆசிய கோப்பை

ஆசிய கோப்பையில் துபே அவுட்டாகி ஸ்ரேயாஸ் வருவாரு.. இந்திய அணியின் பிளேயிங் 11 இது தான்.. அஸ்வின் பேட்டி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் சுப்மன் கில் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பையில் விளையாடுவார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.

அவருக்கு பதில் சிஎஸ்கே அணியில் 357 ரன்களை 132.21 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்த சிவம் துபே நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் அதிரடியாக விளையாடிய துபே இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இருப்பினும் ஆசியக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று அஸ்வின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

துபேவுக்கு பதில் ஸ்ரேயாஸ்:

ஆசிய கோப்பை உத்தேச 11 பேர் கொண்ட இந்திய அணி குறித்து அவர் பேசியது பின்வருமாறு. “ஓப்பனிங்கில் அபிஷேக் – சாம்சன் விளையாடக்கூடும். ஸ்ரேயாஸ் 3வது இடத்தில் விளையாடுவார். சூரியகுமார் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் 4, 5வது இடங்களில் விளையாடுவார்கள். ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிவம் துபேவுக்கு அணியில் இருக்காது”

“ஏனெனில் 3, 4, 5வது இடங்களில் ஸ்ரேயாஸ், சூரியகுமார், திலக் விளையாடுவார்கள். அதனால் 6, 7 இடங்களில் அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கண்டிப்பாக விளையாடுவார்கள் என்பதில் எந்த விவாதமும் கிடையாது. ஏற்கனவே நாம் சஞ்சு சாம்சனை மேலே விளையாட அனுப்பியுள்ளோம். பேக்-அப் விக்கெட் கீப்பர்களை பொறுத்த வரை துருவ் ஜுரேல், கேஎல் ராகுல் (12, 13வது வீரர்கள்) ஆகியோரும் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது”

- Advertisement -

பிளேயிங் லெவன்:

“ரிஷப் பண்ட் தற்போது காயமடைந்துள்ளார். அது போன்ற சூழ்நிலையில் ஜித்தேஷ் சர்மா வருவார். ஐபிஎல் தொடரில் அவர் பேட்டிங் செய்த விதத்தை வைத்து இந்திய அணியில் ஃபினிஷராக செயல்படும் வேலை பொருந்தும். எனவே அவர் உங்களுடைய 15வது வீரராக இருப்பார். 8வது இடத்தில் விளையாடுவதற்கு குல்தீப் யாதவ் – வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவும்”

இதையும் படிங்க: 40 வயசே ஆனாலும் அடுத்த உலககோப்பை வரை ரோஹித் சர்மா கேப்டனா இருக்கனும் – அம்பத்தி ராயுடு கருத்து

“என்னைப் பொறுத்த வரை குல்தீப் 8வது இடத்தில் விளையாட வேண்டும். வாஷிங்டன் சுந்தர் 14வது வீரராக அணியில் இடம் பிடிப்பார். வருண் சக்கரவர்த்தி 9வது இடத்தில் விளையாடுவார். டிஎன்பிஎல் தொடரில் அவருடைய ஆட்டத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தற்போது அவர் தன்னுடைய பேட்டிங்கில் கொஞ்சம் வேலை செய்துள்ளார். 10வது இடத்தில் பும்ரா, 11வது இடத்தில் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விளையாடுவார்கள்” என்று கூறினார்.

- Advertisement -