என்னது ஹார்டிக் பாண்டியாவுக்கு பதில் நானா ? போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள் – இளம்வீரர் சவால்

Dube

இந்திய கிரிக்கெட் அணியில் ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் உள்ளதால் இளம் வீரரான ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்தார் துபே.

Pandya-1

வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அந்த அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷிவம் துபே 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். இதனால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் இடம்பிடித்துள்ள துபே தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

பாண்டியாவுக்கு மாற்று வீரராக எனக்கு வாய்ப்பு கிடைத்ததாக நான் நினைக்கவில்லை ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது அந்த வாய்ப்பை பயன்படுத்தி எனது நாட்டிற்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் அதற்காக நான் முயற்சிப்பேன். மேலும் இவ்வளவு நாள் இந்த வாய்ப்புக்காக நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நிச்சயம் நான் என்னை நிரூபிப்பேன்.

Rohith

வீரர்களின் ஓய்வு அறையில் ஒவ்வொருவரும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். மேலும் கேப்டன் கோலி மற்றும் அணி நிர்வாகம் ஆகியோரிடமிருந்து எனக்கு சிறப்பான ஆதரவும் கிடைக்கிறது. அவர்கள் எனக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆலோசனைகளை வழங்குகின்றனர். நான் இப்பொழுது சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன். நிச்சயம் இந்த தொடரில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான் யாரென்று நிரூபிப்பேன் என்று ஷிவம் துபே கூறினார்.

- Advertisement -