- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாடத்தை கத்துக்கிட்டேன்.. 2024 டி20 உ.கோ ஃபைனலில் அசத்த அந்த 2 பேரின் சப்போர்ட் தான் காரணம்.. துபே பேட்டி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வென்று சாதனை படைத்தது. அந்த தொடரில் அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றிய கேப்டன் ரோகித் சர்மா வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதே போல தொடர்நாயகன் விருது வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

மேலும் ஃபைனலில் ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் அனைவருமே வெற்றியில் முக்கிய பங்காற்றினர். அந்த வரிசையில் சிவம் துபே 2024 ஐபிஎல் தொடரில் ஆரம்பக்கட்ட போட்டிகளில் சிஎஸ்கே அணியில் அடித்து நொறுக்கியதால் உலகக் கோப்பையில் விளையாட தேர்வானார். ஆனால் தேர்வான பின் சொதப்பிய அவர் உலகக் கோப்பையிலும் ஆரம்பக்கட்ட போட்டிகளில் தடுமாற்றமாகவே செயல்பட்டார்.

- Advertisement -

உதவிய ஆதரவு:
அதனால் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை கொண்டு வாருங்கள் என்று இந்திய அணி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் முக்கியமான இறுதிப்போட்டியில் முக்கிய நேரத்தில் களமிறங்கிய அவர் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 27 (16) ரன்களை 168.75 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்து வெற்றியில் தன்னுடைய பங்காற்றினார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் உலகக் கோப்பை பயணம் தமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளதாக சிவம் துபே கூறியுள்ளார். அதே சமயம் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கொடுத்த அதிகப்படியான ஆதரவாலேயே தம்மால் ஃபைனலில் அசத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி இஏஎன்எஸ் இணையத்தில் துபே பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உலகக் கோப்பை பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. ஃபைனல் மிகவும் முக்கிய தருணமாக அமைந்தது. அன்றைய நாளில் நானும் அணியுடன் சேர்ந்து வெற்றியில் பங்காற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன். உலகக்கோப்பையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் எனக்கு பாடமாகும். பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை உத்வேகப்படுத்தியது”

இதையும் படிங்க: அப்படின்னா பேட்ஸ்மேன்கள் மனுஷன் இல்லையா? பவுலர்களை தண்ணீருக்கு விடக்கூடாது.. ஐசிசி’க்கு கவாஸ்கர் கோரிக்கை

“கடைசியில் அது உங்களுடைய சிறந்த முயற்சியை அணிக்காக கொடுத்து உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதைப் பற்றியதாகும். அது எனது மன வலிமை மற்றும் விடாமுயற்சியின் சோதனை. எனக்கு அசைக்க முடியாத நம்ப முடியாத ஆதரவை கொடுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நேர்மறையாக இருந்து கடினமாக உழைக்க ஊக்குவித்தனர். எனது திறமை மீது நம்பிக்கை வைத்த அவர்களின் வழிகாட்டுதல் என்னை நம்புவதற்கு உதவியது. இந்த அனுபவம் வருங்காலத்தில் அணியின் வெற்றிக்காக என்னை இன்னும் வலுவாக மேம்படுத்த உதவும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -