- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எனக்கு மட்டுமல்ல.. மொத்த இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் அது தான் காரணம்.. சிவம் துபே பேட்டி

மும்பை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சிவம் துபே நடைபெற்று முடிந்த 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு தம்முடைய பங்காற்றினர். ஆரம்பக் காலங்களில் இந்திய அணியிலும் மற்ற ஐபிஎல் அணிகளிலும் தடுமாறிய அவர் 2022 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். அங்கே தோனியின் ஆதரவு மற்றும் ஆலோசனைகளால் அசத்திய அவர் கடந்த வருடம் சிஎஸ்கே 5வது கோப்பையை வெல்ல உதவினார்.

அதே வேகத்தில் இந்த வருடமும் அட்டகாசமாக விளையாடிய அவர் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் டி20 உலகக் கோப்பையில் பெரும்பாலான போட்டிகளில் தடுமாறியதால் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை கொண்டு வருமாறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் முக்கியமான இறுதிப்போட்டியில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 27 (16) ரன்களை 168.75 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய அவர் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

- Advertisement -

வளர்ச்சிக்கான உதவி:
இந்நிலையில் தம்மைப் போன்ற நிறைய இந்திய வீரர்கள் வளர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் அசத்துவதற்கு ஐபிஎல் உதவுவதாக சிவம் துபே தெரிவித்துள்ளார். சொல்லப்போனால் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டும் முன்னேற்றத்தை நோக்கி வளர்வதற்கு ஐபிஎல் உதவுவதாகவும் துபே கூறியுள்ளார். இது பற்றி இஏஎன்எஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் ஐபிஎல் அற்புதமாக உதவுகிறது. அது இளம் வீரர்கள் உலகின் சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடி தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான இடத்தை கொடுக்கிறது. தனிப்பட்ட முறையில் ஐபிஎல் தொடரில் விளையாடியதால் நான் நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டேன். அது என்னுடைய ஆட்டத்தையும் தன்னம்பிக்கையையும் முன்னேற்ற உதவியது”

- Advertisement -

“ஐபிஎல் தொடரில் போட்டி மிகுந்த சூழ்நிலை அதிகமாக இருக்கிறது. அது இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்துவதற்கு உதவுகிறது. அது சர்வதேச கிரிக்கெட்டில் இன்று நாம் பார்க்கும் வெற்றிகளுக்கு பங்களித்து வருகிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல ஐபிஎல் தொடரிலிருந்து சுமன் கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ், அபிஷேக் சர்மா போன்ற நிறைய தரமான இளம் வீரர்கள் கிடைக்கின்றனர்.

இதையும் படிங்க: பாடத்தை கத்துக்கிட்டேன்.. 2024 டி20 உ.கோ ஃபைனலில் அசத்த அந்த 2 பேரின் சப்போர்ட் தான் காரணம்.. துபே பேட்டி

அதனால் ஒரே நேரத்தில் 2 அணியை களமிறக்கும் அளவுக்கு இந்தியா உயர்ந்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகள் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாறுகின்றன. ஆனால் அந்த பிரச்சினை இந்திய கிரிக்கெட்டில் வராமல் இருப்பதற்கு ஐபிஎல் முக்கிய காரணமாக திகழ்கிறது என்றால் மிகையாகாது.

- Advertisement -