ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக இந்திய டி20 அணியில் இடம்பிடித்த வீரர் இவர்தான் – விவரம் இதோ

Pandya
- Advertisement -

வங்கதேச அணி நவம்பர் மாதம் துவக்கத்தில் இந்தியா வந்து 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கான டி20 அணி நேற்று தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தலைமையில் அறிவிக்கப்பட்டது.

Pandya-1

- Advertisement -

இதில் தொடர்ச்சியாக விளையாடி வரும் இந்த அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் முதுகுப்பகுதியில் செய்த ஆப்ரேஷன் காரணமாக ஓய்வில் இருப்பதால் ஹார்டிக் பாண்டியா அணியில் இடம்பெறவில்லை.

இந்த வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா இடம் பெறாததால் அவருக்கு பதிலாக வேகப்பந்து ஆள்ரவுண்டர் என்ற ஒருவரை இந்திய அணியின் தேர்வு செய்ய தேர்வுக்குழு முடிவு செய்தது அதன்படி மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான ஷிவம் துபேவை அணியில் தேர்வு செய்தனர். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் தற்போது அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Dube

மேலும் விஜய் சங்கர் இந்த தொடரில் பரிசீலிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் ஷங்கரை தாண்டி ஷிவம் துபே அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் அவர் என்ற தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியா காயம் குணமடைந்து அணிக்கு திரும்பும் வரை இது போன்று அவ்வப்போது ஒரு சிறப்பு வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement