சிஎஸ்கே அணியில் கலக்கும் துபேவின்.. 2024 டி20 உ.கோ இடத்துக்கு அது மட்டுமே தடையா இருக்கும்.. ஏபிடி பேட்டி

Ab De Villiers
- Advertisement -

இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த தொடர் நிறைவு பெற்றதும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதில் தற்போதைய ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய நல்ல ஃபார்மில் உள்ள வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது போன்ற சூழ்நிலையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று யுவராஜ் சிங், விரேந்தர் சேவாக் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஏனெனில் பெங்களூரு போன்ற மற்ற அணிகளில் தடுமாறிய அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடத் துவங்கியது முதல் அட்டகாசமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

ஏபிடி பாராட்டு:
குறிப்பாக கடந்த வருடம் கேரியரிலேயே உச்சமாக 418 ரன்கள் அடித்து சென்னை 5வது கோப்பையை வெல்ல உதவிய சிவம் துபே இந்திய அணியிலும் கம்பேக் கொடுத்தார். அதே ஃபார்மில் இந்த வருடமும் 6 போட்டிகளில் 242* ரன்கள் எடுத்துள்ள அவர் மிடில் ஓவர்களில் சிக்ஸர்களை பறக்க விட்டு சிஎஸ்கே அணியின் வெற்றி நாயகனாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஆர்சிபி அணியை விட சிஎஸ்கே அணியில் சுதந்திரமாக விளையாடும் வாய்ப்பு சிவம் துபேவுக்கு கிடைத்துள்ளதாக ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். அந்த வாய்ப்பில் அபாரமாக செயல்படும் துபே 2024 20 உலக கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியானவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இருப்பினும் ரிங்கு சிங், ரியன் பராக், தினேஷ் கார்த்திக் போன்ற நிறையயா வீரர்கள் உலகக் கோப்பையில் விளையாடப் போட்டியிடுவது துபேவின் இடத்திற்கு தடையாக இருக்கலாம் என்றும் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆர்சிபி அணியிலிருந்து வெளியே வந்தது முதல் அவர் நீண்ட தூரத்தை கடந்து வந்துள்ளார். அவர் சிஎஸ்கே அணியில் சுதந்திரமாக விளையாடுவது போன்ற ஏதோ ஒரு உணர்வை கண்டுபிடித்துள்ளார். அதனால் அங்கே அவர் தன்னுடைய வாழ்வின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவது போல் தெரிகிறது. களத்திற்கு செல்லும் அவர் எதைப் பற்றியும் அதிகம் சிந்திக்காமல் பந்தைப் பார்த்து சூழ்நிலைக்கு தகுந்தார் போல் அடிக்கிறார்”

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ : கோலியும் நானும் ஓப்பனிங்கா? எல்லாமே பொய்.. அவர பாக்கவே இல்லை.. ரோஹித் ஓப்பன்டாக்

“அவர் அவுட்டாகாமல் சில 50+ ரன்களை அடித்தது சிஎஸ்கே அணியின் வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவம் துபே 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் தனக்கான இடத்தை கண்டறிய முடியும். இருப்பினும் அங்கே நிறைய ஃடிராபிக் இருப்பது மட்டுமே அவருக்கான ஒரே பிரச்சினையாக இருக்கலாம். பவர் ஹிட்டரான அவர் அற்புதமான வீரர்” என்று கூறியுள்ளார்.

Advertisement