க்ளீன் போல்ட்டான விரக்தியில் சிம்ரோன் ஹெட்மயர் செய்த செயல்.. அதிரடி தண்டனை வழங்கி அனுப்பி வைத்த பிசிசிஐ

- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரின் குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தானை 36 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்த ஹைதராபாத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மே 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 50, ராகுல் திரிபாதி 37 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் சார்பில் ட்ரெண்ட் போல்ட், ஆவேஷ் கான் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாட முடியாமல் 20 ஓவரில் 139/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 42, துருவ் ஜுரேல் 56* ரன்கள் எடுத்த நிலையில் ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக சபாஷ் அகமது 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ஹெட்மயருக்கு தண்டனை:
அதனால் மே 26ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ள ஹைதராபாத் தகுதி பெற்றது. மறுபுறம் போராடாமலேயே தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் 2008க்குப்பின் இரண்டாவது கோப்பையை வெல்லாமல் பரிதாபமாக வெளியேறியது. முன்னதாக இந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய சிம்ரோன் ஹெட்மயர் ராஜஸ்தானை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி வரும் அவர் ராஜஸ்தானின் ஃபினிஷராக அறியப்படுகிறார். ஆனால் இந்தப் போட்டியில் சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் ஆரம்பம் முதலே தடுமாறிய அவர் மொத்தம் 10 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 4 ரன்களில் அபிஷேக் ஷர்மா சுழலில் க்ளீன் போல்ட்டானார். அதனால் ஏமாற்றமடைந்த அவர் விரக்தியில் ஸ்டம்பை தன்னுடைய பேட்டால் அடித்து விட்டு கோபத்துடன் பெவிலியனுக்கு வெளியேறினார்.

- Advertisement -

இந்நிலையில் இப்போட்டியில் மைதானத்தின் உபகரணத்தை சேதம் செய்த ஹெட்மயர் 2.2 லெவல் 1 விதிமுறையை மீறியதாக போட்டி நடுவர் ஜவகள் ஸ்ரீநாத் புகார் செய்துள்ளார். அதை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ ஷிம்ரோன் ஹெட்மயருக்கு போட்டியின் சம்பளத்திலிருந்து 10% அபராதம் விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதை ஹெட்மயர் ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தப்படாது என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 ஃபைனல் : ராஜஸ்தான் தோல்வியால் இந்திய அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. இப்போ குறை சொல்ல முடியாது

இதைத்தொடர்ந்து ஐபிஎல் ஃபைனலில் விளையாடாத அனைத்து அடுத்ததாக நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய நாட்டுக்காக விளையாட உள்ளனர். குறிப்பாக ஐபிஎல் ஃபைனலில் இந்தியாவுக்காக தேர்வான 15 பேர் கொண்ட அணியில் ஒரு வீரர்கள் கூட விளையாடவில்லை. எனவே இந்திய வீரர்கள் முன்னதாகவே அமெரிக்காவுக்கு பயணித்து பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

Advertisement