இந்திய அணியில் நான் விட்ட இடத்தை பிடிக்க தயாராயிட்டேன். எனக்கு ஒரு வாய்ப்பு குடுங்க – வாய் திறந்து வாய்ப்பு கேட்ட சீனியர்

Ind-1

ஷிகர் தவான் இந்திய அணிக்காக ஆடி வரும் இடதுகை அதிரடி துவக்க வீரர் ஆவார் . இவருக்கு தற்போது 34 வயதாகிறது .கடந்த 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொகாலி மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிரடியாக 187 ரன்கள் அடித்து கிரிக்கெட் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
2018 ஆம் ஆண்டு வரை இந்தியாவிற்காக மூன்று விதமான போட்டிகளிலும் ஆடிக்கொண்டிருந்தார்.

dhawan

ஆனால் திடீரென அவரது ஆட்டம் போட்டிகளில் சரியில்லாமல் போனது. மேலும் அதனைத்தொடர்ந்து அடிக்கடி ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவரால் டி20 போட்டிகளிலும் சரியாக விளையாட முடியவில்லை. அதனால் அவர் டி20 போட்டிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார்

இந்நிலையில் மீண்டும் தான் டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அதனை எப்போதும் கைவிடப் போவதில்லை என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளார் ஷிகர் தவான் இது குறித்து அவர் கூறுகையில்…

Dhawan

டெஸ்ட் போட்டிக்காக நான் எப்போதும் என்னை தயார்படுத்திக் கொண்டு தான் இருக்கிறேன். எப்போதும் நான் விட்டுக் கொடுக்கப்போவதில்லை. தொடர்ந்து முயற்சி செய்து வருவேன். தற்போதைய டெஸ்ட் அணியில் நான் விளையாடவில்லை என்றாலும் கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து சிறப்பாக விளையாடி வருகிறேன். நிச்சயம் டெஸ்ட் போட்டிகளில் எனக்கும் வாய்ப்பு வரும் என்று தெரிவித்திருக்கிறார் தவான். ஏற்கனவே இவரது இடத்தை டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா மற்றும் மயங் அகர்வால் பிடித்துக்கொண்டனர்.

- Advertisement -

Dhawan

இந்த இருவரையும் தாண்டி இளம் வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ப்ரீத்திவி ஷா ஆகியோர் இருக்கின்றனர். இந்த நான்கு பேரில் கிட்டத்தட்ட இரண்டு பேர் சரியாக ஆடாவிட்டால் தான் ஷிகர் தவானுக்கு இடம் கிடைக்கும் என்பது உறுதி. தற்போது வரை 34 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஷிகர் தவான் 2315 ரன்கள் அடித்து இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 5687 ரன்களும், டி20 போட்டிகளில் 1588 ரன்களும் அடித்திருக்கிறார் ஷிகர் தவான்.