Worldcup : புதிய துவக்கவீரர் குறித்து புதிய தகவலை வெளியிட்ட தவான் – விவரம் இதோ

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரு

Dhawan
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

- Advertisement -

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்நிலையில் உலக கோப்பை இந்திய அணி குறித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் உலக கோப்பை தொடரில் துவக்க வீரராக யாருடன் வேண்டுமானாலும் களமிறங்க தயாராக உள்ளேன் மேலும் தொடர்ந்து என்னை ரோகித் உடன் களமிறங்கி விளையாடுவீர்களா ? என்று பலர் கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

hitman

அதற்கு என் பதில் இதுதான் ரோகித் என்ன என் மனைவியா ? ரோஹித் அல்ல வேறு யாராக இருந்தாலும் நான் அவருடன் இணைந்து விளையாடுவேன். குறிப்பாக பிருத்திவி ஷா என்னுடன் ஓபனிங் ஆடினாலும் அவருடன் ஆடுவேன். என்னுடைய இலக்கு எல்லாம் ஒன்றுதான் துவக்கத்தில் ஒருவர் அடித்து ஆடினார் ஒருவர் நிதானித்து ஆட வேண்டும் இதுவே உலக கோப்பைக்கு என்னுடைய திட்டம் ஆகும் என்று தவான் கூறினார்.

இதிலிருந்து உலகக்கோப்பையில் ரோகித் பின்வரிசை அதாவது நான்காவது வீரராக களமிறங்கும் வாய்ப்பும், ராகுல் ஓபனிங்கில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக மறைமுகமாக தெரிகிறது. இருப்பினும் தொடரின்போது முழுவிவரமும் தெரியும்.

Advertisement