இந்திய அணியில் நான் இழந்த இடத்தை ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடி பிடிப்பேன் – சபதம் செய்த இந்திய வீரர்

IND
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வீரராக ஷிகார் தவான் திகழ்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்களை குவிக்க இன்னும் இவருக்கு 23 ரன்கள் மட்டுமே தேவை.

dhawan

- Advertisement -

மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின்போது ரோகித் சர்மாவுடன் இணைந்து 100 ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணியில் சச்சின் கங்குலி ஜோடிக்கு பிறகு ரோகித் சர்மா ஷிகர் தவான் சிறந்தவர்களாக இருந்து வருகிறார்கள். ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை இந்த ஜோடியே சிறந்தது எனவும் கோலியும் கூறியுள்ளார். ஆனால் டி20 தொடரை பொறுத்தவரை தவானின் பார்ம் மோசமாகவே உள்ளது.

2018ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 தொடரில் உள்ளேயும் வெளியேயும் இருந்து வருகிறார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கூட முதல் போட்டியின்போது வாய்ப்பை பெற்ற தவான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த 4 போட்டிகளிலும் இருந்து கழற்றி விடப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி விளையாடி வரும் போதிலும் டி20 போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவரது டி20 ஓப்பனர் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

Dhawan

இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடர் முடிந்து இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகர்கர் தவானிடம் பேட்டி ஒன்றினை எடுத்தார். அதில் உங்களால் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க முடியுமா ? உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா ? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தவான் : நான் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே முயற்சி செய்து வருகிறேன். என்றால் நிச்சயம் இது முடியும். ஒரு சரியான வாய்ப்பு அமையும் பட்சத்தில் அதனை தக்க வைத்து சிறப்பாக விளையாடுவேன்.

இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் தொடரான சையது முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை ஆகியவற்றில் பங்கேற்று விளையாடி வருகிறேன். இது எனக்கு நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நான் என்னை நிரூபித்து மீண்டும் டி20 அணியில் நிரந்தர இடம் பிடிப்பேன் என ஷிகர் தவான் உறுதியுடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement