- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஓய்வுக்கு பிறகு என்ன வேலை செய்யப்போகிறார்? ஷிகர் தவான் கூறிய நேரடி பதில் – விவரம் இதோ

இந்திய அணியின் அனுபவ நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகள் என மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடியிருந்தார். அது தவிர்த்து 2008-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஐபிஎல் தொடரில் 222 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஷிகர் தவானின் எதிர்காலம் :

தற்போது 38 வயதான அவர் இனியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்து இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் இளம் வீரர்களுக்கு வழி விடும் வகையில் தனது எதிர்கால திட்டங்களையும் உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக ஓய்வை அறிவித்த தவானுக்கு பலரது மத்தியில் இருந்தும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இந்நிலையில் 38 வயதாகும் அவர் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் என்ன செய்யப் போகிறார்? என்பது குறித்து தகவலை அவரே வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

என்னுடைய பார்வையில் பணம் சம்பாதிக்க வேண்டும். நான் மட்டுமல்லாமல் என்னை சுற்றி இருப்பவர்களையும் பொருள் ஈட்டும் வகையிலான தொழிலை நான் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே அது தொழிலாக இருக்கலாம், சினிமாவாக இருக்கலாம் அல்லது அரசியலில் கூட நான் ஈடுபட தயாராக இருக்கிறேன்.

- Advertisement -

இருந்தாலும் கடவுள் எப்படி நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறாரோ? அதன் வழியே நான் செல்ல விரும்புகிறேன். எனவே எந்த வேலையாக இருந்தாலும் அதை முழு மனதுடன் செய்ய காத்திருக்கிறேன். அதேபோல நான் தற்போது படைத்திருக்கும் சாதனைகளை விட இனிவரும் நாட்களில் சாதனையாளராக வாழவேண்டும் என்று விரும்புகிறேன். நான் மட்டுமல்லாமல் என்னுடன் என்னைச் சுற்றி நெருக்கமாக இருக்கும் அனைவருமே கை நிறைய பணத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : அடுத்த ஐ.பி.எல் தொடரில் ரோஹித் சர்மா பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடுவாரா? – தினேஷ் கார்த்திக் பதில்

அதன் காரணமாக நான் எந்த வேலையும் செய்ய தயாராக இருக்கிறேன். நான் ஏற்கனவே செய்யும் தொழில்கள் மூலம் நன்றாக சம்பாதித்து வருகிறேன். ஆனாலும் புது புது விடயங்களை முயற்சி செய்து பார்க்க ஆசை அந்த வகையில் வர்ணனையாளராகவும் செயல்பட விரும்புகிறேன் என்று ஷிகர் தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -