- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவர் அடிச்ச டபுள் செஞ்சுரிக்கு அப்புறம் எனக்கு சேன்ஸ் கிடைக்கும்ன்ற நம்பிக்கையே போயிடுச்சி – தவான் வெளிப்படை

இந்திய அணியின் அனுபவ துவக்க வீரரான ஷிகார் தவான் கடந்த பல ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மாவுடன் இணைந்து பல அபாரமான வெற்றிகளை இந்திய அணிக்காக தேடிக் கொடுத்துள்ளார். சச்சின் மற்றும் கங்குலி ஆகியோருக்கு அடுத்து மிகச்சிறந்த வலது கை இடது கை துவக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இருந்துள்ளனர். அதிலும் குறிப்பாக icc தொடர்களில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தவானுக்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தனது பார்மை இழந்தது மட்டுமின்றி இளம் வீரர்களின் வருகையால் அணியிலிருந்து மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்ட தவான் தற்போது முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டுள்ளார். மேலும் கடந்த டி20 உலக கோப்பை தொடரிலேயே இடம் பிடிக்காத அவர் எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அணியிலும் இடம் பிடிக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் தனது இடம் பறிபோனது குறித்தும் மீண்டும் இந்திய அணியில் இணையும் வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்தும் பேட்டி ஒன்றினை அழித்துள்ள ஷிகார் தவான் வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தாலும் என்னுடைய இடத்தில் சுப்மன் கில்லை தான் தேர்வு செய்வேன். ஏனெனில் அவர் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்ற போது அவரும், டிராவிடும் எனக்கு முழு ஆதரவையும் கொடுத்தனர். 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால் இளம் வீரர்களின் வருகையால் என்னுடைய இடம் கேள்விக்குறியானது.

- Advertisement -

அதேபோன்று அவர்கள் சிறப்பான ஆட்டத்தை விளையாடியதால் அணி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசுவதற்கு முன்னர் நிச்சயம் என்னால் ஒருநாள் அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர் இரட்டை சதம் அடித்த பிறகு என்னுடைய நம்பிக்கை முற்றிலுமாக தளர்ந்து விட்டது.

இதையும் படிங்க : ஒருநாள் உலககோப்பை தொடரில் அவர்களால் வலுவான அணியாக செயல்பட முடியும் – சோயிப் அக்தர் நம்பிக்கை

இது எனக்கு மட்டுமல்ல எனக்கு முன்னால் பல வீரர்களுக்கும் நடந்திருக்கிறது. அதனால் இதனை பெரிதுபடுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். ஷிகார் தவானின் இந்த வெளிப்படையான வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -