தோனி செய்த இந்த பெரிய உதவியால் தான் இன்று நான் இந்த இடத்தில் இருக்கிறேன் – மனம்திறந்த ஷிகார் தவான்

Dhawan
- Advertisement -

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் இடதுகை பேட்ஸ்மேன் ஷிகர் தவான். அறிமுக போட்டியிலேயே அதிரடியாக விளையாடி 183 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம்பிடித்தார் ஷிகர் தவான் .
அப்போது இந்திய அணி கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி.

dhawan
dhawan

இவர் அறிமுகமான அடுத்த வருடமே சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. அப்போது துவக்க வீரருக்கான போட்டியில் பல வீரர்கள் இருந்தார்கள். ரோகித் சர்மா, ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் ,முரளி விஜய் என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது.
இங்கிலாந்து சென்று பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது.

- Advertisement -

அப்போது தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர். இறக்கி விடப்பட்டார்கள். இருவரும் கடுமையாக சொதப்பினார்கள் ஆனால் தினேஷ் கார்த்திக் சதம் அடித்திருந்தார். இருந்தாலும் தோனி அதிரடியாக ஒரு முடிவெடுத்து ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்கு துவக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்பு கொடுத்தார்.

dhawan 2

இதுகுறித்து தற்போது பேசியுள்ளார் ஷிகர் தவான். இதுகுறித்து அவர் கூறுகையில் : சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் என்னால் ரன்கள் குவிக்க முடியவில்லை. ஆனாலும் தோனி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் என்னை விளையாட வைத்தார்.

dhawan

எனக்கு அவர் அளித்த ஆதரவும், ஊக்கமும் பக்கபலமாக இருந்து என்னை காப்பாற்றியது. தோனி அதிகஅளவு எனக்கு நம்பிக்கை கொடுத்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ஷிகர் தவான்.
இந்த தொடரில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் தொடர் நாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement