- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னால அவன் கிட்ட பேச கூடமுடியல.. தந்தையர் தினம் அன்று வருத்தமான பதிவை வெளியிட்ட – ஷிகர் தவான்

இந்திய அணியின் அனுபவ வீரரான ஷிகர் தவான் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 167 ஒருநாள் போட்டிகள், 34 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 38 வயதான அவர் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் வேளையில் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நேற்று தந்தையர் தினமான அன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷா முகர்ஜி என்பவரை ஷிகர் தவான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஆஷா முகர்ஜி அவரது மகனோடு ஆஸ்திரேலியாவில் தற்போது வசிக்கிறார்.

அதனால் தனது மகனை பார்க்க முடியாமல் அவ்வப்போது ஷிகர் தவான் வருத்தம் தெரிவித்து வந்தார். இந்நிலையில் நேற்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட வேளையில் அவருடைய அப்பா மற்றும் மகன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தவான் சில உருக்கமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அந்தவகையில் அவர் பகிர்ந்த அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : என்னுடைய அப்பாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். என்னுடைய மகன் இல்லாமல் நான் கொண்டாடும் தந்தையர் தினம் இது என்பதால் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் இந்தளவுக்கு வளர.. இந்தியாவில் கிடைச்ச அந்த வாய்ப்பு தான் காரணம்.. ஜொனதன் ட்ராட் பேட்டி

என்னால் என் மகனுடன் பேசக்கூட முடியவில்லை. அனைத்து அப்பாக்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் என அவர் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக தனது மகனை காணாமல் தவான் தவித்து வருவது ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -