Shikhar Dhawan : உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய தவான் – விவரம் இதோ

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது.

Dhawan
- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

ind vs aus

இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும் கோலி, தோனி, பாண்டியா மற்றும் ராகுல் என அனைவருமே சிறப்பாக விளையாடி வருவதால் அடுத்தடுத்த போட்டிகளை காண ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு ஒரு புதிய சிக்கல் உண்டாகி உள்ளது. அது யாதெனில் கடந்த ஆஸ்திரேலியா போட்டியின்போது தவான் குல்டர் நைல் வீசிய பந்தில் பெருவிரலில் அடிபட்டார். அந்த காயம் தற்போது விரலில் வீக்கமடைந்து உள்ளதாகவும் அதற்காக இன்று தவானுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

dhawan 1

இந்நிலையில் தற்போது தன்னுடைய காயம் அதிகரித்து வருவதாகவும் இன்னும் மூன்று வாரங்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று இந்திய அணி மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் தவான் ஓய்வு எடுக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி மூன்று வாரம் முடியும் முன் உலகக்கோப்பை முடிவடையவுள்ளதால் தவான் தற்போது உலகக்கோப்பை தொடரில் இருந்து விலக உள்ளார்.

MS

அதன்படி தவான் காயம் காரணமாக தற்போது இந்திய திரும்ப உள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரரை இந்தியா இங்கிலாந்து அனுப்ப முடிவு செய்துள்ளது. அதன்படி யார் உலகக்கோப்பை தொடரில் தொடரில் பங்கேற்பார் என்று இதுவரை தெரியவில்லை.

Advertisement