நியூசி அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம் – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 என்ற நிலையில் கைப்பற்றி அசத்தியது. அதன் பின்னர் பெங்களூர் போட்டி முடிந்த பிறகு நேற்று இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொள்ள உள்ளது.

Ind vs Aus

- Advertisement -

நியூசிலாந்து செல்லும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடிய தவான் சிறப்பாக விளையாடி 74 ரன்கள் மற்றும் 96 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால் நேற்று முன்தினம் நடந்து முடிந்த பெங்களூர் போட்டியின் போது அவர் பீல்டிங் செய்யும்போது டைவ் அடித்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேறினார். மேலும் அவர் இரண்டாவது இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வரவில்லை.

Dhawan

அதன்பிறகு அவருக்கு எக்ஸ்ரே எடுக்க இருப்பதாக பி.சி.சி.ஐ தரப்பில் தகவல் வெளியாகியது. மேலும் வெற்றி விழாவின் போதும் தவான் கையில் கட்டுடன் காணப்பட்டார். எனவே அவரது காயம் எப்போது குணமாகும் ? நியூசி தொடருக்கு அவர் தயாரா என்று அனைத்தும் தற்போது
கேள்விக்குறியாகத்தான் இருந்தது.

Dhawan 1

இந்நிலையில் தற்போது தவான் நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இடம்பிடிக்கமாட்டார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் நாளை 22 ஆம் தேதி ஒருநாள் தொடருக்கான இந்திய வீரர்கள் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

Advertisement