ரோஹித் பெஸ்ட்டா ? கோலி பெஸ்ட்டா ? இவருடன் பேட்டிங் செய்வதே பிடிக்கும் – மனம் திறந்த ஷிகர் தவான்

Dhawan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இடதுகை தொடக்க வீரர் ஷிகர் தவான் தனக்கு யாருடன் பேட் செய்வது பிடிக்கும் எனவும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரில் யாருடன் பார்ட்னர்ஷிப் நன்றாக அமையும் என்பது குறித்து தனது கருத்தினை தற்போது தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஊரடங்கு உத்தரவினால் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளார். மேலும் இந்த ஓய்வு நேரத்தில் தனது வீட்டில் உள்ள வேலைகளை தானாக செய்யும் இவர் அடிக்கடி ரசிகர்களுடன் அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களுடன் உரையாடி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் தனது வீட்டில் மனைவியுடன் பேட்மிட்டன் விளையாடுவது, தனது வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்து வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது உங்களின் சிறந்த பேட்டிங் பார்ட்னர் விராட் கோலியா இல்லை ? ரோகித் சர்மாவா ? என்று கேள்வி கேட்டார்.

அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் உடனடியாக ரோகித் சர்மா தான் என பதில் கூறினார். கிட்டதட்ட ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் 7 ஆண்டுகளாக இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக ஆடி வருகின்றனர். ஒருநாள் அரங்கில் 109 ஆட்டங்களில் இந்திய அணிக்கு துவக்க வீரராக இருந்துள்ளார் தவான். மேலும் 136 ஆட்டங்களில் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து 4,247 ரன்களைக் குவித்துள்ளார்.

Dhawan

2013ஆம் ஆண்டு இந்த ஜோடி முதன்முதலாக துவக்க இடத்தில் களம் இறங்கி கோப்பையை வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அப்போது முதல் தற்போது வரை இருவரும் துவக்க வீரர்களாக ஜொலிக்கும் வருகின்றனர். இதுவரை 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5688 ரன்களை விளாசியுள்ளார்.

- Advertisement -

மறுபுறம் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டின் தலை சிறந்த வீரராக உருவாக்கியுள்ளார். தற்போதுவரை 214 போட்டிகளில் விளையாடி 9115 ரன்களை குவித்துள்ளார். இதில் மூன்று இரட்டை சதங்களும் அடங்கும். தற்போது வரை ஆறு ஐசிசி தொடர்களில் இந்த இருவரும் ஜோடியாக களமிறங்கியுள்ளனர். மேலும் 2073 ரன்களை இருவரும் குவித்துள்ளனர்.

Dhawan-1

சமீபகாலமாக ஷிகர் தவான் தொடர்ச்சியான காயம் காரணமாக அணியில் இடம் பிடிக்க திணறி வருகிறார். அவருக்கு பதிலாக துவக்க வீரராக டி20 அணியில் கேஎல் ராகுல் ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement