கிரிக்கெட்டை விட அந்த விளையாட்டு தான் ரொம்ப பிடிக்கும்..! – ஷிகர் தவான் அதிரடி..!

dhawan

முறுக்கு மீசை, அதிரடி ஆட்டம் என்று இந்திய அணியில் இடம் பிடித்தவர் ஷிகர் தவான். சில நாட்களாக தனது அதிரடியில் சறுக்கல் கொண்ட தவான் பின்னர் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் தனது அதிரடியை மீண்டும் தொடர்ந்தார். கிரிக்கெட் போட்டியில் தான் செய்யும் பாவனை கபடி போட்டியில் இருந்து தான் தனக்கு வந்தது என்று கூறியுள்ளார் தவான்.
dhawan

கிரிக்கெட் போட்டிகளை பொறுத்த வரை ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கு ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். அவர்கள் சதமடித்தாலோ, விக்கெட் எடுத்தாலோ தனக்கான முத்திரை பாதிக்கும் எதாவது ஒரு செய்கையை செய்வார்கள். அந்த வகையில்தவானின் தாவணின் முறுக்கு மீசை மிகவும் பேமஸ். அதை தாண்டி அவர் கேட்ச் பிடித்தால் தொடையை தட்டும் ஸ்டைல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்த பழக்கம் எங்கிருந்து வந்தது என்பதை போற்றிய ரகசியத்தை கூறியுள்ளார் தவான். சமீபத்தில் இது பற்றி அவர் தெரிவிக்கையில்”என்னக்கு கபடி விளையாட்டு மிகவும் பிடிக்கும். அந்த போட்டிகளில் தான் வீரர்கள் ரைட் செல்லும் போது தொடையை தட்டி செல்வார்கள், அது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த பழக்கம் எனக்கு கிரிக்கெட் விளையாடும் போது அண்டிக் கொண்டது.
dhawan

நான் முதன் முதலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியில் விளையாடிய போது, வாட்சன் அடித்த பந்தை பிடித்து என் தொடையை தட்டினேன். அப்போது மிகழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவ்வாறு செய்தேன். அதிலும் நான் பௌண்டரி கோட்டிற்கு அருகில் நிற்கும் போது அவ்வாறு தொடையை தட்டினால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைவார்கள். ” என்று கூறியுள்ளார்.