எல்லை கோட்டில் உயரமாக எகிறி கேட்ச் பிடித்த தவான்..! ஜாண்டி ரோட்ஸ் பாராட்டு மழை..! – வைரலாகும் வீடியோ

jhonty
- Advertisement -

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பீல்டர்களில் ஒருவராக விளங்கியவர் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ். பந்தை எகிற பிடிப்பதில் வல்லவரான இவர் அந்த அணியின் நட்சத்திர வீரராக இருந்து வந்தார். இந்நிலையில் பீல்டிங் ஜாம்பவானான ஜாண்டி ரோட்ஸ் இந்திய அணி பேட்ஸ்மேன் ஷிகர் தவானின் கேட்சை பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்து சுற்று பயணம் செய்துள்ளா இந்த அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. இன்று அணிகளும் 1-1 என்ற சமன் பெற்றிருந்த நிலையில் இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி அபாரா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டாவது போட்டியில் ஷிகர் தவான் அற்புதமான கேட்ச் ஒன்றை பிடித்து அசத்தினார்.இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 17 ரன்கள் எடுத்திருந்த போது ஹார்திக் பாண்டியா வீசிய பந்தை சீஸ் எல்லை கோட்டை நோக்கி அடித்தார்.

எல்லை கோட்டில் அருகில் நின்றுகொண்டிருந்த ஷிகர் தவான் மிகவும் உயரமாக எகிறி அந்த பந்தை லாவகமாக பிடித்து அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தவானின் இந்த அற்புதமான கேட்சை அனைவரும் பாராட்டிய நிலையில் தற்போது ஜாண்டி ரோட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘என்ன ஒரு அற்புதமான கேட்ச், உங்கள் திறமையை வைத்து கபடி கூட செய்யமுடியும் ‘ என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ பதிவு.

Advertisement