சஞ்சு சாம்சன் வெய்ட் பண்ணிதான் ஆகணும் – ரிஷப் பண்ட்டுக்கு சான்ஸ் கொடுத்ததற்கு கேப்டன் தவான் சொல்லும் காரணம் இதோ

Sanju Samson Rishabh Pant Shikhar Dhawan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்தில் பங்கேற்று வந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நிறைவு பெற்றுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுத்த இச்சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை வென்ற இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சுமாராக செயல்பட்டு கோப்பையை நழுவ விட்டது. அதை விட இந்த தொடரில் இந்த வருடம் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டது ஏன் என்றும் சொதப்பலாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட்டுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது ஏன் என்பதுமே அனைவரது கேள்வியாக இருந்தது.

Rishabh Pant Sanju Samson

ஏனெனில் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் 2015இல் சர்வதேச அரங்கில் அறிமுகமானாலும் 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து விளையாடியது போல 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளை பெறாமல் குப்பையை போல் பயன்படுத்தப்பட்டு வந்தார். இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் இந்திய அணிக்குள் தேர்வு செய்யப்பட்டார். அதில் கிடைத்த வாய்ப்புகளில் பெரும்பாலும் அசத்தலாக செயல்பட்டு ரிஷப் பண்ட்டை விட அதிரடியான ஸ்ட்ரைக் கரேட்டிலும் அதிக ரன்களும் குவித்த அவருக்கு டி20 உலக கோப்பையில் ரிசர்வ் பட்டியலில் கூட வாய்ப்பு கிடைக்காத நிலையில் நியூசிலாந்து டி20 தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

வெய்ட் பண்ணி தான் ஆகணும்:

அதனால் வழக்கம் போல ரசிகர்கள் கொந்தளித்த நிலையில் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 36 ரன்கள் எடுத்து சிறப்பாக செயல்பட்ட அவர் 6வது பவுலர் தேவை என்ற காரணத்திற்காக மனசாட்சியின்றி அதிரடியாக நீக்கப்பட்டார். மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சி செயல்படுகிறார் என்பதற்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கடைசி 9 இன்னிங்சில் முறையே 10, 15, 11, 6, 6, 3, 9, 9, 27 என எப்போதுமே சிறப்பாக செயல்படாத ரிஷப் பண்ட் ராஜா வீட்டுப் பிள்ளையை போல் சமீபத்திய டி20 உலக கோப்பை உட்பட தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

Rishabh Pant Hardik Pandya

அவரை வருங்கால விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் உருவாக்க நினைப்பதாலேயே இந்த வேலைகள் நடைபெறுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் சதமடித்து வெற்றி பெற வைத்த ரிஷப் பண்ட் அதன்பின் வேறு எந்த ஒருநாள் தொடரிலும் விளையாடாமல் இந்த நியூசிலாந்து தொடரில் விளையாடியதாலேயே முழுமையான வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக கேப்டன் ஷிகர் தவான் கூறியுள்ளார். அதே சமயம் சஞ்சு சம்சன் சிறப்பாக செயல்பட்டாலும் சதமடிக்கவில்லை என்பதால் காத்திருக்க வேண்டும் என்ற வகையில் போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் யார் மேட்ச் வின்னர் என்பதை பார்க்கும் போது கடினம் இருக்காது. ஏனெனில் கடைசியாக இங்கிலாந்தில் ஒருநாள் தொடரில் விளையாடிய ரிசப் பண்ட் சதமடித்தார். எனவே சதமடித்த யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். குறிப்பாக மேட்ச் வின்னருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். சஞ்சு சாம்சனும் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சில சமயங்களில் உங்களுக்கு முன்பே ஒருவர் சிறப்பாக செயல்பட்டு வரும் போது நீங்கள் உங்களுக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியது அவசியமாகும்”

Sanju-Samson-and-Dhawan

“குறிப்பாக ரிஷப் பண்ட் போன்ற ஒருவர் அற்புதமான நுணுக்கம் தெரிந்த மேட்ச் வின்னர். அவர் சிறப்பாக செயல்படாத போது வேண்டுமானால் அவரது இருக்கையை மற்றவருக்கு கொடுக்கலாம். அதுவரை அந்த இருக்கை அவருக்கானது” என்று கூறினார். அதாவது ரிஷப் பண்ட் மிகச் சிறந்த மேட்ச் வின்னர் என்பதாலும் கடைசியாக பங்கேற்ற ஒருநாள் தொடரில் சதமடித்தார் என்பதாலும் என்ன தான் இந்த வருடம் சிறப்பாக செயல்பட்டாலும் சஞ்சு சாம்சன் காத்திருந்து தான் தீர வேண்டும் என்று தவான் கூறியுள்ளார். முன்னதாக தற்காலிக பயிற்சியாளர் லக்ஷ்மனும் இங்கிலாந்து மண்ணில் சதமடித்தார் என்பதற்காக ரிஷப் பண்ட் வாய்ப்பு பெற்றதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement