- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலிக்கும் எனக்குமான வதந்தி சண்டையை தோனி முடிச்சாரு.. 2014இல் கோலிக்காக ரிட்டையரானாரு.. தவான் நெகிழ்ச்சி

இந்திய அணிக்காக கடந்த தசாபத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நிறைய சதங்கள் அடித்து ஏராளமான வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியால் வளர்க்கப்பட்ட அவர்கள் தங்களை சாம்பியன் வீரர்களாக நிரூபித்தவர்கள். அவர்களில் 2014 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி மற்றும் தவான் ஆகியோருக்கிடையே சண்டை ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

அதாவது காபாவில் நடைபெற்ற 2வது போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் தவான் காயமடைந்து வெளியேறினார். அடுத்த நாள் அவரும் விராட் கோலியும் பேட்டிங் செய்ய வேண்டிய நிலைமை வந்தது. அப்போது விராட் கோலியுடன் அவர் களமிறங்காததால் அவர்களுக்கிடையே சண்டை என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அப்போட்டியின் முடிவில் மறுத்த கேப்டன் தோனி அப்படிச் சொல்பவர்கள் ஹாலிவுட் திரைப்படத்திற்கு கதை எழுதச் செல்லலாம் என்று பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

வதந்தி சண்டை:

அப்படி விராட் கோலிக்கும் தமக்கும் இடையேயான வதந்தியாக வந்த சண்டையை தோனி முடித்து வைத்ததாக தவான் தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை அடுத்ததாக தலைமைத் தாங்குவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்பதை உணர்ந்ததாலேயே தோனி 2014இல் ஓய்வு பெற்றதாகவும் தவான் கூறியுள்ளார். இது பற்றி அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.

“டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன் ப்ரிஸ்பேனில் நடந்த 2வது போட்டியின் போது எனக்கும் விராட் கோலிக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக எழுந்த வதந்திகளை தோனி பாய் நன்றாகவே முடிவுக்கு கொண்டு வந்தார். அப்போட்டியில் எனக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டதால் ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் விராட் கோலியுடன் களமிறங்காத முடிவை நான் கடைசி நேரத்தில் எடுத்ததாக வதந்திகள் பரவின”

- Advertisement -

முடித்த தோனி:

“அது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்ட போது தோனி பாய் கிண்டலாக பதிலளித்தார். அதாவது அந்த தகவலை யார் கொடுத்திருந்தாலும் அவர்கள் ஃமார்வெல் அல்லது வார்னர் பிரதர்ஸ் ஹாலிவுட் சூப்பர்ஹீரோ திரைப்படத்திற்கு கதை எழுதத் தகுதியானவர்கள் என்று தோனி பாய் சொன்னார். வதந்திகளை நிறுத்துவதற்கு அவருடைய அந்த ஒரு வரியே போதுமானதாக இருந்தது”

இதையும் படிங்க: 130 ஸ்ட்ரைக் ரேட் முக்கியம்.. இந்த பொண்ணு சீக்கிரமே இந்திய கேப்டனாகும் நாள் வரும்.. வாழ்த்திய கங்குலி

“அதன் பின் அவருடைய மிகப்பெரிய ஓய்வு முடிவு வந்தது. அந்த முடிவு அணியில் இருந்த அனைவருக்கும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அந்த முடிவை தோனி பாய் டெஸ்ட் கிரிக்கெட்டின் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை இதயத்திலிருந்து உணர்ந்து எடுத்தார். ஓய்வு முடிவை அறிவித்ததும் அவரை நான் வலுவாக கட்டியணைத்து சிறந்த கேரியருக்காக பாராட்டினேன்” என்று கூறினார்.

- Advertisement -