தோனி பாய் தான் எங்க நட்பு உருவாக காரணம்.. இப்போவும் ரோஹித், கோலியால் சாதிக்க முடியும்.. தவான் பேட்டி

Shikhar Dhawan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்கள். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் நடைபெற திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் அதற்கு முன் அவர்களை வயதைக் காரணமாக வைத்து கழற்றி விட கெளதம் கம்பீர், அஜித் அகர்கர் முயற்சித்து வருகிறார்கள்.

அதன் முதல் படியாகவே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. ஆனால் அதற்காக அசராத ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

ரோஹித்தின் நட்பு:

அதே போல கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற விராட் கோலி தம்முடைய பங்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார். அத்துடன் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, விராட் கோலி முன்னேறி சாதனை படைத்துள்ளார்கள். இந்நிலையில் வயதானாலும் 2027 உலகக் கோப்பையில் அசத்தும் அளவுக்கு அவர்களிடம் வெற்றிக்கான பசி இருப்பதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

மேலும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் தம்முடன் ரோஹித் சர்மாவை கேப்டன் தோனி ஓப்பனிங்கில் களமிறக்கியதாகவும் தவான் தெரிவித்துள்ளார். அப்போதிலிருந்து ரோஹித் சார்மா உடனான தம்முடைய நட்பு நீடித்து வருவதாகவும் தவான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

தவான் மகிழ்ச்சி:

“ரோஹித் சர்மாவும் நானும் எப்போதுமே நல்ல புரிதல் மற்றும் நட்பைக் கொண்டுள்ளோம். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் முன்கூட்டியே காலடி வைத்து விட்டார். நான் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி அதிகம் முதிர்ச்சியடைந்த வீரராக வந்தேன். தோனி பாய் அவரை ஓப்பனிங்கில் விளையாடச் சொன்னது முதல் எங்களுடைய பார்ட்னர்ஷிப் ஆரம்பமானது. அந்தந்த சுற்றுகளில் நாங்கள் இந்தியாவுக்காக விளையாடியது நம்பிக்கையையும் முதிர்ச்சியையும் அளித்தது”

இதையும் படிங்க: 69 ரன்ஸ்.. 18 வருடத்தில் பெறாத சாதனை வெற்றி.. ஃபைனலில் இஷான் தலைமையில் ஜார்கண்ட் சாம்பியன்

“10 ஆண்டுகளாக அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்தது அழகான பயணமாகும். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினார். விராட், ரோஹித் போன்ற வீரர்கள் நிறைய சாதித்துள்ளார்கள். தங்களுடைய பசி தீர்ந்து விட்டது என்று உணரும் போது மட்டுமே அவர்கள் ஓய்வு பெறுவார்கள். அவர்கள் அணியின் சிறந்த சொத்து. அவர்களிடம் இளம் வீரர்கள் தொடர்ந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்” என்று கூறினார்.

Advertisement