மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் தவான். எந்த தொடரில் எப்போது தெரியுமா ? – விவரம் இதோ

Dhawan

இந்திய அணியின் முன்னணி வீரரான ஷிகர் தவான் ரஞ்சிப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறாமல் போனது. அதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை அவர் தவற விட்டார்.

Dhawan

மேலும் தற்போது காயத்திற்கான சிகிச்சை மற்றும் பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு வரும் தவான் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரோகித் சர்மா மற்றும் ரோஹித் ஆகியோர் இந்திய அணியில் இல்லாததால் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இழந்தது.

இந்த தோல்வியில் தொடக்க வீரர்களின் பங்கு அதிகமாக இருப்பதால் மீண்டும் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோரின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது தவான் குணமடைந்து வருவதால் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு வரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

dhawan 3

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மார்ச் 12ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது. அதன்பிறகு லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும் இந்த ஒருநாள் தொடர் ஐபிஎல் தொடருக்கு முன்னர் வருவதால் இந்திய அணி வெற்றி பெற்று மீண்டும் தனது வெற்றிப் பாதைக்கு திரும்ப ஒரு வழியாக இருக்கும் எனவே இந்த தொடரில் முக்கிய வீரர்கள் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.