Shikhar Dhawan : தவான் காயம் குறித்த முதல் அறிக்கை வெளியானது – தகவல் இதோ

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது

Dhawan
- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

Dhawan

- Advertisement -

நாளை நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தவான் களம் இறங்கவில்லை என்றாலும் தற்போது இந்திய அணிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தவானின் முதற்கட்ட மருத்துவ பரிசோதனை முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தவானுக்கு ஏற்பட்டுள்ள காயம் மூன்று வாரங்கள் நீடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி இல்லாமல் 25ஆம் தேதிக்குள் குணமடையும் என்று தற்போது சொல்லப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இந்தியா மூன்று போட்டிகளில் விடுகிறது. நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், 16ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் 22 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் இந்தியா விளையாடுகிறது.

dhawan 1

இதில் ஆப்கானிஸ்தான் போட்டியில் இந்தியா எளிதில் வென்றுவிடும் அதனால் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் மட்டும் இந்திய அணி சற்று சமாளித்தால் அதற்குள் சரியாகி மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement