நான் ஒரு பிளான் போட்டேன்.. ஆனா மயங் வேறொரு பிளான் போட்டு ஆச்சர்யப்படுத்திட்டாரு.. தவான் வருத்தம்

Shikhar Dhawan 2
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப்பை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. மார்ச் 30ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ குயிண்டன் டீ காக் 54, கேப்டன் பூரான் 42, க்ருனால் பாண்டியா 43* ரன்கள் எடுத்த உதவியுடன் 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த பஞ்சாப்புக்கு 102 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஷிகர் தவான் 70, ஜானி பேர்ஸ்டோ 42 ரன்கள் அடித்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அப்போது அறிமுகப் போட்டியில் பந்தை கையிலெடுத்த 21 வயது இளம் வீரர் மயங் யாதவ் தொடர்ந்து 145 – 150 கி.மீ வேகத்தில் மிரட்டலாக வீசி சவாலை கொடுத்தார்.

- Advertisement -

தவான் பாராட்டு:
குறிப்பாக தவானுக்கு எதிராக 155.80 கிலோமீட்டர் வேகத்தில் வீசி இந்த சீசனில் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்த அவர் ஜானி பேர்ஸ்ட்ரோவை அவுட்டாக்கி 27 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அவருடன் மோசின் கான் 2 விக்கெட்டுகள் எடுத்ததால் அதிரடி காட்ட முடியாத பஞ்சாப் 20 ஓவரில் 178/5 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய மயங் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்று தற்போது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார். அவரை பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவானும் போட்டியின் முடிவில் வருத்தத்துடன் பாராட்டியது பின்வருமாறு. “நாங்கள் நன்றாக துவங்கினோம். ஆனால் மயங் தன்னுடைய வேகத்தை வைத்து நன்றாக பந்து வீசினார். அவரை எதிர்கொண்டது நன்றாக இருந்தது”

- Advertisement -

“அவருடைய வேகம் எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஆனால் அவருக்கு எதிராக அவருடைய வேகத்தை பயன்படுத்தி அடிக்க திட்டமிட்டேன். இருப்பினும் அவர் பவுன்சர் மற்றும் யார்கர்களை நன்றாக வீசினார். அதனால் அவருடைய வேகத்தை பயன்படுத்தி மைதானத்தின் குறைவான தூரத்தை கொண்ட பகுதியில் அடிக்குமாறு எங்களுடைய பேட்மேன்களுக்கு ஆலோசனை வழங்கினேன்”

இதையும் படிங்க: ஒரு தோல்வியால் அஃப்ரிடிக்கு டாட்டா காட்டிய பாகிஸ்தான்.. வருங்காலத்துக்காக ரிவர்ஸ் கியரில் அதிரடி முடிவு

“ஆனால் மயங் யாதவ் உடம்புக்கு நெருக்கமாக பந்து வீசி பேர்ஸ்ட்ரோவை அவுட்டாக்கினார். அதே ஆலோசனையை நான் ஜிதேஷ் சர்மாவுக்கு சொன்னேன். ஆனால் அப்போது மோசின் கான் நன்றாக பந்து வீசினார். கேட்ச் தவற விட்டதும் எங்களுக்கு பின்னடைவு கொடுத்தது. எனவே இது போன்ற அம்சங்களை ஆராய்ந்து நாங்கள் முன்னோக்கி செல்ல வேண்டியுள்ளது” என்று கூறினார்.

Advertisement