தொடர்ச்சியா சூப்பரா ஆடுறாரு. இவரே டி20 உலகக்கோப்பை தொடரில் ஓப்பனரா ஆடனும் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ind

ஏழாவது டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் ரோஹித் உடன் இணைந்து ஓப்பனிங்கில் விளையாட போவதாக அறிவித்திருந்தார் விராட் கோலி. ஏனெனில் ரோஹித்துடன் தவான், ராகுல், அகர்வால் என பல வீரர்களை சோதித்த கோலி இறுதியாக இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் அவரே துவக்க வீரராக களமிறங்கி ரோஹித்துடன் சேர்ந்து அருமையான பாட்னர்ஷிப் அமைத்தார் அதனை தொடர்ந்து அவரே உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக விளையாடுவார் என்று கூறினார்.

Rohith-1

கடந்த சில தொடர்களாகவே இந்தியாவின் t20 அணயில் ரோகித் உடன் இணைந்து ஓப்பனிங் விளையாடுவதற்கு சரியான வீரர் இல்லாமல் இந்திய அணி தவித்து வந்தது உண்மைதான். தற்போது நடைபெற்று முடிந்த இங்கிலாந்து இந்தியா இடையிலான டி20 தொடரில் ரோஹித் உடன் தவான் மற்றும் ராகுல் என இருவரும் சரிவர சோபிக்க தவறினர். அதனால் வரப்போகும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு ரோஹித்துடன் இணைந்து நான் தான் ஓபனிங் விளையாடப் போகிறேன் என்று அறிவித்து இருந்தார் விராட் கோலி.

இதற்கிடையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், தான் விளையாடிய மூன்று போட்டியில் இரண்டு அதிரடியான அரைசதங்களை அடித்து பக்காவான பார்மில் உள்ளார் ஷிகர் தவான். சென்னை அணிக்கு எதிராக 54 பந்துகளில் 85 ரன்களும், நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 49 பந்துகளில் 92 ரன்களும் எடுத்து அணியை வெற்றபறச் செய்துள்ளார் ஷிகர் தவான்.

இதன் மூலம் இந்திய அணிக்கு ஓபனிங் ஆர்டரில் களமிறங்க நான் தகுதியானவன் என்பதை நிரூபித்துள்ளார். இந்திய அணிக்கு சரியான ஓபனிங் பேட்ஸ்மேன் இல்லாததால்தான், ஒன்டவுன் ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி ஓப்பனிங் ஆடும் முடிவை எடுத்தார். ஆனால் தற்பொழுது தன்னுடைய பழைய பார்மை மீட்டெடுத்த ஷிகர் தவான் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

dhawan

மேலும் சிறப்பான துவக்கம் தருவது மட்டுமின்றி நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் தவான் விளையாடி வருவதால் கோலி தான் எடுத்த முடிவை மாற்றிக்கொண்டு டி20 ஓவர் உலகக் கோப்பையில் ஷிகர் தவானை ஓப்பனிங்கில் விளையாட வைப்பாரா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.