இழக்க இருந்த தனது இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட சீனியர் வீரர் – எஸ்கேப் ஆயிட்டாருப்பா

Dhawan

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அபாரமான ரன் குவிப்பே பார்க்கப்படுகிறது.

Dhawan 1

அந்த வகையில் இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் நேற்றைய போட்டியில் 106 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 98 ரன்களை விளாசி அசத்தினார். மேலும் 2 ரன்களில் சதமடிக்கும் அற்புத வாய்ப்பை இழந்தாலும் ரசிகர்களின் மத்தியில் இவரது ஆட்டம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி கோலியுடன் அவர் மிடில் ஓவர்களில் சிறப்பான பாட்னர்ஷிப்பையும் அமைத்திருந்தார்.

ஏற்கனவே டி20 தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய ஷிகர் தவான் அந்த போட்டியில் ரன்களை குவிக்க தடுமாறியதால் அடுத்த நான்கு போட்டியிலிருந்தும் நீக்கப்பட்டார். இதனால் அவர் மீண்டும் டி20 அணியில் இணைவது கடினம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒருநாள் தொடரின் இந்தப் போட்டியிலும் அவர் சொதப்பி இருந்தால் நிச்சயம் அவரது இடம் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கும். ஏனெனில் இந்திய அணியின் ஓப்பனிங் இடத்திற்கு அடுத்தடுத்து வீரர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர்.

Dhawan 1

அதிலும் குறிப்பாக அகர்வால், கில், ப்ரித்வி ஷா போன்ற வீரர்கள் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரருக்கான வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஒருவேளை தவான் சொதப்பி இருந்தால் அவரது இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும். ஆனால் முதலாவது ஒருநாள் போட்டியிலேயே தனது அனுபவத்தையும், தனது திறனையும் நிரூபித்த தவான் சிறப்பாக விளையாடி 98 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

இந்த ஒருநாள் தொடருக்கு முன்னதாகவே ரோகித் மற்றும் தவான் தான் ஒருநாள் போட்டிகளில் ஓப்பனராக விளையாடுவார் என்றும் அவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வந்துள்ளனர் என்று கூறியிருந்தார். அவர் கூறியபடி தற்போது தவான் தனது திறமையை நிரூபித்துள்ளார். இதன்மூலம் இனிவரும் போட்டிகளிலும் அவர் தனது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார் என்றே கூற வேண்டும்.