“பால் ஆப் தி செஞ்சுரி” யாராலும் தொட முடியாத பந்தினை வீசி அசத்திய – இந்திய வீராங்கனை

Shikha
- Advertisement -

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி எவ்வாறு கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறதோ அதைப் போன்றே தற்போது கடந்த சில ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்து அணிகளையும் வீழ்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய மகளிர் அணியானது அந்நாட்டு மகளிர் அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் நேற்றைய டி20 போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 118 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இப்படி குறைவான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா சென்ற போது இந்திய அணியின் வீராங்கனை ஷிகா பாண்டே வீசிய ஒரு பந்து ஆஸ்திரேலிய வீராங்கனையை கிளீன் போல்ட் ஆக்கியது. அவரின் இந்த பந்து 6-ஆவது ஸ்டம்பில் பிட்ச் ஆகி மிடில் ஸ்டம்பில் அடித்தது. இந்த ஒரு குறிப்பிட்ட பந்தினை எந்த ஒரு வீரரும் அடிக்க முடியாது என்றும் இந்த ஒரு டெலிவரியை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் இதுபோன்ற ஒரு பந்தை நிச்சயம் யாராலும் அடிக்க முடியாது என்றும் இது ஒரு நல்ல இன் ஸ்விங்கிங் பந்து என்றும் இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து என்றும் பாராட்டி அனைவரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement