யுவராஜுக்கு பதிலாக களமிறங்கிய தோனி.. ! வலதுகை பேட்ஸ்மேன் தந்திரம்..!வெகுநாள் ரகசியத்தை உடைத்த ஷேவாக்

worldcup2011
- Advertisement -

ஏப்ரல் 2, 2011 இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாத ஒரு நாள். இந்திய அணி 2வது முறையாக உலக கோப்பையை கையில் பிடித்தது. தோனி தலை மையிலான இந்திய அணி 28 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை இந்தியாவிற்கு சொந்தமாக்கியது. இந்த இறுதி போட்டியில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வை இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கூறியுள்ளார்.

worldcup

- Advertisement -

இந்த உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்து இலங்கையுடன் மோதியது. இரண்டாவது பேட் செய்த இந்திய அணி தொடக்கத்திலேயே முக்கிய ஆட்டக்காரர்களான சச்சின் மற்றும் ஷேவாக்கை இழந்து தடுமாறியதுபின்னர் கைகோர்த்து நின்ற கோலி மற்றும் கவுதம் கம்பீர் இணை சற்று நின்று விளையாடி வந்தனர். பின்னர் கோலியும் அவுட்டாக அவரை அடுத்து யுவராஜ் சிங் களமிறங்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தோனி பேட்டுடன் வந்தது சற்று ஆச்சர்யமாளித்தது. ஏனெனில் அந்த உலக கோப்பை தொடர் முழுக்க யுவராஜ் 4 வது பேட்டிங் வரிசையில் சிறப்பாக விளையாடி வந்தார்.

yuvidhoni

இருப்பினும் யுவராஜ் இடத்தில் இறங்கிய தோனி 91 ரன்களை அடித்ததுடன் இறுதியில் சிக்ஸ் ஒன்றை அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்த சம்பவம் இன்னும் நம் கண்முன்னே இருக்கிறது.ஆனால், தோனிக்கு அந்த இறுதி போட்டியில் பேட்டிங் தர வரிசையில் பதவி உயர்வை அளித்தது சச்சின் தான் என்று ஷேவாக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சச்சின் மற்றும் சேவாக் ‘வாட் தி டக்’ என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது இந்த தகவலை பற்றி தெரிவித்த ஷேவாக், கோலி மற்றும் கம்பீர் ஆடுகளத்தில் இருந்த போது சச்சின், தோனியிடம் ஒரு நேரடியான கருத்து ஒன்றை சொன்னார்.

sachin

ஒரு வேளை இடது கை பேட்ஸ்மேன் அவுட்டானால் இடது கை பேட்ஸ்மேனை அனுப்புங்கள், இல்லை வலது கை பேட்ஸ்மேன் அவுட்டானால் வலது கை பேட்ஸ்மேனை அனுப்புங்கள்’ என்று சச்சின் கூறினார். பின்னர் வலது கை பேட்ஸ்மேன் கோலி அவுட் டாக தோனி களமிறங்கினார். சச்சின் கூறியதால் தான் அந்த 4வது வரிசையில் அந்த தொடரில் நன்றாக விளையாடி வந்த யுவராஜ் சிங்கிற்கு பதிலாக தோனி களமிறங்கினார்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement