உலக சாதனையை தவறவிட்ட சேவாக்.! சதி செய்த சாப்பாட்டு இடைவேளை..

- Advertisement -

நேற்று (ஜூன் 14) ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா மோதிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஷிகர் தவான் உணவு இடைவெளிக்கு முன்னர் சதமடித்து சாதனை படைத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் உலக கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை படைத்த 6 வது வீரர் என்ற பெயரையும் பிடித்தார். ஆனால், இந்த சாதனையை படைக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கிற்கு ஏற்கனவே சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை தவறவிட்டுள்ளார்.

shewag.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்தார். தனது 87 வது பந்தில் 100 ரன்னை எடுத்து தனது சதத்தை பூர்த்தி சாதனை படைத்தார். இறுதியில் 96 பந்துகளில் 107 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டுமேற்கிந்திய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேவாக் முதல் பாதியிலேயே தந்து அரை சதத்தை நடித்திருந்தார். அந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சேவாக் உணவு இடைவேளைக்கு முன்னர் 75 பந்துகளில் 99 ரன்களை அடித்து விட்டார்.

shewagtea

ஒருவேளை இது சாதனை என்று தெரிந்திருந்தால் அந்த போட்டியில் சேவாக் முன்கூட்டியே சதமடித்திருந்திருப்பார். சேவாக் அந்த போட்டியில் சதமடிக்க தவறியதால் அந்த சாதனையை தற்போது தவான் முறியடித்து விட்டார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்களில் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்னாள் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சேவாக் நூலிழையில் தவறவிட்டுள்ளது சேவாக் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement